தொடர் தோல்விகள் அதிர்ச்சியில் இருக்கும் சமத்து நடிகை!
சமர்த்தாக நடிக்கும் போதெல்லாம் ஆஹா ஓஹோ என்று ஓடிய படங்கள் நடிகைக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தன.
ஆனால் சமீபத்தில் வெளியான இரண்டு படங்களுமே பப்படங்கள் ஆகிப் போனதில் அதிகம் அதிர்ச்சியடைந்திருப்பது அந்த நடிகைதானாம். காரணம் தாராள கவர்ச்சி... அதிகபட்சமாக பிகினி போட்டு நடித்திருந்தார். ரசிகர்களை சுண்டி இழுக்கலாம் என்று நினைத்திருந்த சமர்த்து நடிகைக்கு படத்தின் ரிசல்ட் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது.
தமிழில்தான் இப்படி என்றால் தெலுங்கில் பெரிய நடிகருடன் நடித்த படம் கடந்த வாரம் வெளியானதாம். அந்தப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் இருக்கிறதாம். ஏனெனில் அதிலும் அதீத கவர்ச்சியில்தான் நடிகை நடித்திருந்தாராம். ஆனால் அந்தப் படம் தோல்வியடைந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றதாம். இதனால் நடிகை அதிர்ச்சியில் இருக்கிறாராம்.
நடிகையின் படங்களுக்கு கிடைத்துள்ள ரிசல்ட் காரணமாக அவரின் எதிரி நடிகரின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











