தமிழ், தமிழன்னு பேசுறதெல்லாம் சும்மாவா.. பொண்ணுங்கள இப்டி வளர்த்திருக்கீங்களே! வறுபடும் உச்சநடிகர்!
சென்னை: அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உச்ச நடிகர் தனது மகள்களின் கொஞ்சும் தமிழால் சமூக வலைதளங்களில் வறுபட்டு வருகிறார்.
தமிழ் சினிமாவில் சிறு குழந்தை முதல் நடித்து வரும் உச்ச நடிகர் திரைத்துறையில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் மட்டுமின்றி இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என திரைத்துறையில் இவர் கை வைக்காத துறையே இல்லை.
தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசும் அந்த நடிகர் தற்போது வரை தனது வாழ்க்கையை நடிப்புக்காகவே அர்ப்பணித்து வருகிறார்.

பிரமாண்ட விழா
படத்துக்கு படம் தனித்துவத்தை காட்டி வரும் அந்த நடிகர் அண்மையில் தனது பிறந்தாளை கொண்டாடினார். சொந்த ஊரில் பிரமாண்டமாக நடந்த விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நடிகர்.

மகள்கள் வாழ்த்து
அப்போது விருந்தினர்கள் ஒரு புறம் வாழ்த்த நடிகரின் குடும்பத்தினரும் நடிகருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக மகள்கள் அழகு தமிழில் அப்பா என்று கூறாமல் பாபுஜி பாபுஜி என்றனர்.

முத்தா கொட்டிடும்
ஏற்கனவே டிவிட்டரில் பிறந்த நாள் வாழ்த்து கூறியபோதே பாபுஜி என்று குறிப்பிட்டதால் கடுப்பான நெட்டிசன்ஸ் அப்பா என்றால் வாயில் உள்ள முத்தா கொட்டிவிடும் என விளாசினர். ஆனால் அதனையும் மீறி மேடையிலும் அதே வார்த்தையை கூறினர்.

தமிழ் வராது
சரி அது கிடக்கட்டும் என்றால்.. நடிகரின் இளையமகள் பேசிய தமிழை கேட்ட ரசிகர்கள் அய்யோ அம்மா முதல்ல மைக்க கொடுத்துட்டு போயி உட்காரு என்று கூறும் அளவுக்கு இருந்தது. தமிழ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்துவிட்டு எனக்கு தமிழ் வராது மன்னித்து விடுங்கள் என ஸ்டைலாக கூறிவிட்டு அமர்ந்தார்.

தமிழ் வாடையே இல்ல
இதனை பார்த்த பார்வையாளர்கள், இந்தி மொழிக்கு எதிராக குரல் கொடுப்பவர், வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என்றும் தமிழன் என்றும் கூறும் நடிகர் தனது மகள்களை தமிழ் வாடையேப் படாதப்படி இப்படியா வளர்ப்பது என வறுத்தெடுத்து வருகின்றனர்.

நடிகருக்கு தர்ம சங்கடம்
மேலும் தமிழ், தமிழன் என வீரவசனம் பேசுவதெல்லாம் வெறும் அரசியல் ஆதாயத்திற்காக மட்டும்தானா என்றும் விளாசி வருகின்றனர். ஏற்கனவே குடும்ப விழாவில் நடிகையை சேர்த்துக்கொண்ட போட்டோ வைரலானதால் விமர்சிக்கப்பட்டு வரும் நடிகருக்கு மகள்களின் தமிழால் தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications











