நடிகையுடன் திருமண கிசுகிசு.. அடிக்கடி அமெரிக்கா ட்ரிப்.. கோடிக்கணக்கில் செலவு!
சென்னை: சோசியல் மீடியாவில் எந்த பக்கம் சென்றாலும் பேசுபொருளாக இருப்பது பிரபல நடிகரின் திருமண செய்தி தான். இந்த செய்தி பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் அந்த நடிகர் அமைதியாக இருந்தாலும், திருமணம் செய்தி உண்மைதான் என்று பாலிவுட் சினிமா அடித்து கூறுகிறது. இதுகுறித்து பிரபல சினிமா பிரபலம் பேட்டி அளித்துள்ளார்.
அதில், பிரபல நடிகருக்கும் வளர்ந்து வரும் நடிகைக்கும் திருமணம் என்கிற செய்தி இணையதளத்தில் அடிபட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அந்த 3 சம்பவங்கள் தான். இரண்டு நடிகர்களும் சேர்ந்து நடிக்காத போது எப்படி இருவருக்குள் நெருக்கம் ஏற்பட்டது என்று தெரியவில்லை. தற்போது, பிரபல நடிகராக இருக்கும் ஒல்லி நடிகர் சினிமாவிற்கு வந்த புதிதில், ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். அப்போது தான், பிரபல நடிகர் ஒருவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண வதந்தி: இவர்களுடைய வாழ்க்கை சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் தான், இருவரும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்தனர். விவகாரத்து செய்ய வேண்டாம் என ஒல்லி நடிகரின் குடும்பத்தினர் பலமுறை எடுத்து கூறி உள்ளனர். குழந்தைகளுக்காக இருவரும் இணைந்து வாழ வேண்டுமென சொல்லியும் ஒல்லி நடிகர் அதை கேட்காமல் விவாகரத்து செய்துவிட்டு தற்போது தனியாக இருக்கிறார்.
அமெரிக்கா ட்ரிப்: தனியாக இருக்கும் மகனை பார்த்து வருத்தப்பட்ட ஒல்லி நடிகரின் பெற்றோர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி பல முறை அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத அந்த நடிகர், அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். எந்த படப்பிடிப்பு முடிந்தாலும், காதும் காதும் வைத்தது போல, அமெரிக்காவிற்கு சென்றுவிடுகிறார். அங்கு கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு மேல் இருக்கும் ஒல்லி நடிகர் கோடிக்கணக்கில் செலவு செய்கிறார். அமெரிக்காவிற்கு ஏன் செல்கிறார் எதற்காக செல்கிறார் என பெற்றோர் கேட்டால், அதற்கும் ஒரு பொய்யான காரணத்தை சொல்கிறாராம். இப்படியே விட்டால் மகனின் வாழ்க்கையும், பெயரும் கெட்டுவிடும் என பெற்றோர் கவலையில் இருக்கின்றனர். இப்படி ஒரு பிரச்சனை ஓடிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தான், நடிகரின் திருமண வதந்தி செய்தி பரவி உள்ளது. இது நிச்சயம் உண்மையாகத்தான் இருக்கும் என்று அந்த பிரபலம் அழுத்தமாக தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications