மஜாவான சந்தோஷத்தில் மாஸ் நடிகர்.. நினைச்சதை விட டிரிபிள் மடங்கு லாபம்.. உஷாரா இருக்க முடிவு!

By Staff

சென்னை: மாஸ் நடிகர் தான் எதிர்பார்த்ததை விட 3 மடங்கு உற்சாக வரவேற்பு தனக்கு அனைத்து இடத்திலும் கிடைத்து வருவதால் மஜாவான சந்தோஷத்தில் உள்ளார் என்கின்றனர். தலைக்கு மேல் ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகள் இருந்தாலும், மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் செல்வாக்கு பெருகி வருகிறது.

மாஸ் நடிகரின் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்கிற பெயரில் சில அரசியல் கட்சிகள் பண்ண வேலைகளை பார்த்து வந்த மக்கள் அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க உச்ச நடிகர் மற்றும் டாப் நடிகரை விட உச்சத்துக்கு மாஸ் நடிகரின் சம்பளம் எகிறிவிட்டது.

Famous Actor happy after getting huge people support after several chaos

மேலும், ஆசை படாமல் கஷ்டப்பட்டு ஏதாவது மக்களுக்கு செய்யலாம் என நினைத்துள்ள நடிகருக்கு தற்போது மக்கள் மத்தியிலும் நல்ல ரெஸ்பான்ஸ் இருப்பதை பார்த்து ரொம்பவே ஹேப்பியாகி உள்ளாராம்.

வளர விடக்கூடாது: ஆரம்பத்திலேயே இவரை வளர விடக் கூடாது என்று ஏகப்பட்ட பேர் முடிவு செய்து நடிகரை முடித்துக் கட்டி வீட்டில் உட்கார வைக்க அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றனர். ஆனால், அதெல்லாம் மாஸ் நடிகருக்கு எதிராக மாறாமல் அவருக்கு ஃப்ரீ புரமோஷனகாவே மாறி வருகிறதாம். நாளுக்கு நாள் நடிகரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் உயர்ந்துக் கொண்டே போவதை பார்த்து எதிர் கூடாரங்கள் கடுப்பாகி வருவதாக கூறுகின்றனர்.

மக்கள் செல்வாக்கு: தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வரும் பப்ளிக் போல்களில் மக்கள் அதிகபட்சமாக மாஸ் நடிகருக்கு வாய்ப்புக் கொடுத்து பார்க்கலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. மற்றவர்களை விட மாஸ் நடிகரின் பெயரைத் தான் மக்கள் அதிகம் சொல்லி வருகின்றனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இளைஞர்களை விட பெண்கள் மற்றும் வயதானவர்களின் ஆதரவு அதிகபட்சமாக மாஸ் நடிகருக்கு கிடைத்து வருகிறதாம். நடிகரை சுற்றி சில தவறுகள், பஞ்சாய்த்துகள் நடந்து வந்தாலும், அதற்கும் நடிகருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சூழ்ச்சியால் சிக்கித் தவிக்கும் நம்ம வீட்டுப் பிள்ளைக்கு நாமதான் ஆதரவு கொடுக்க வேண்டும் என மக்கள் நினைப்பதே நடிகருக்கு பெரிய பூஸ்ட்டாக மாறியுள்ளது என்கின்றனர்.

உஷாரா இருக்கணும்: பல பெரிய பிரச்சனைகளுக்குப் பிறகும் மக்கள் இப்படி நம்மை ஏன் நம்புறாங்க என்கிற கேள்வி மாஸ் நடிகருக்கே வந்து விட்டதாம். உச்ச நடிகர் வருவார், வந்து ஏதாவது நல்லது செய்வார் என நினைத்து ஏமாந்த ரசிகர்களுக்கு மாஸ் நடிகராவது களத்தில் குதித்திருக்கிறாரே என்கிற ஒரே நம்பிக்கை தான் காரணம் என்கின்றனர். ஆனால், இதை உஷாராக பார்த்துக் கொண்டு ஒழுங்கா வேலை பார்த்தால் நினைத்தது நடக்கும் என்றும் உஷாரா இல்லை என்றால் எல்லாமே வேஸ்ட் ஆகிவிடும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X