என்ன அந்த நடிகரின் படத்தை பத்தின சத்தத்தையே காணோம்.. பாலிவுட் படத்துக்கான விளம்பரம் தான் வருது!

சென்னை: காமெடியாக இருந்தாலும் சரி சீரியஸ் ஆன நடிப்பாக இருந்தாலும் சரி வெளுத்து வாங்கி வரும் அந்த பிரபல நடிகரின் அரசியல் படம் எப்போ ரிலீஸ் என்கிற சத்தத்தையே காணோம் என்கிற பேச்சு கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அந்த பிரபல நடிகரும், அந்த படம் குறித்த அப்டேட் ஏதும் போட முடியாமல், தனது பாலிவுட் படத்திற்கான விளம்பரத்தை தினமும் செய்து வருகிறார்.

இந்த மாசம் ரிலீசாகும்னு அறிவிக்கப்பட்ட அந்த அரசியல் படம் மீண்டும் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்சார் பிரச்சனை

சென்சார் பிரச்சனை

அரசியல் கருத்துக்களையும் அரசியல்வாதிகளையும் விமர்சித்து தைரியமாக இயக்கும் அந்த இயக்குநரின் அடுத்த படைப்பான இந்த படத்தின் ரிலீசுக்கு சென்சார் பிரச்சனை மிகப்பெரிய தடையாக இருந்தது.

பிரச்சனை ஓவர்

பிரச்சனை ஓவர்

எந்த காட்சியையும் வெட்ட மாட்டேன் என அடம்பிடித்து வந்த அந்த இயக்குநர், கடைசியில் படம் ரிலீசான போதும் என்கிற சூழ்நிலையில், காட்சிகளை வெட்டி ரிலீஸ் செய்ய பணிந்து போனார். பிரச்சனையும் ஓவர் இந்த மாசம் ரிலீசாகிடுமுன்னு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிட்டாங்க..

சத்தமே காட்டல

சத்தமே காட்டல

ஆனால், இப்போ அவங்க சொன்ன ரிலீஸ் தேதியும் வரவுள்ள நிலையில், அந்த படம் குறித்த எந்தவொரு தகவலும் இல்லை. படக்குழு அப்படியே கப்சிப்ன்னு சத்தமே காட்டாம இருக்காங்க. இதனால், இந்த வாட்டியும் அந்த படம் ரிலீசாகாதுன்னு தான் தெரியுது.

கடும் போட்டி

கடும் போட்டி

அந்த படம் ரிலீசாகும் என அறிவித்த தேதியில் தற்போது மூன்று படங்கள் போட்டி போட்டு ரிலீசாக ரெடியாகி வருகின்றன. அதிலும், அந்த ராட்சசன் பாணி படத்துக்கு கொஞ்சம் எதிர்பார்ப்பு இருக்கு. இந்த நேரத்துல அந்த அரசியல் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாமுன்னு படக்குழு முடிவு செஞ்சிடுச்சா என்னன்னு ஒண்ணும் தெரியல..

பாலிவுட் படத்துக்கு

பாலிவுட் படத்துக்கு

ஆனால், அந்த ஹீரோ எதைப் பத்தியும் கவலையில்லாம தனது பாலிவுட் அறிமுகப் படத்துக்கு இங்கே ரசிகர்களை பிடிக்க இப்பவே விளம்பரம் பண்ண ஆரம்பித்து விட்டார்.

அடுத்த மாசம்

அடுத்த மாசம்

மேலும், அந்த பிரபல நடிகரின் மாஸ் கமர்ஷியல் படம் ஒண்ணும் அடுத்த மாசம் ரிலீசாகுது. அதனால், அடுத்த மாசமும் அந்த அரசியல் படம் ரிலீசாகுமாங்குறது கேள்விக் குறியாத்தான் இருக்கு.

ஆறிப் போயிடும்

ஆறிப் போயிடும்

கடந்த ஆண்டு மத்தியிலேயே அந்த படம் ரிலீசாக வேண்டியது. இப்படி ரொம்ப நாள் ரிலீஸ் தள்ளிப் போயிட்டே இருந்தா படம் பழசா மாறி அதன் சூடும் ஆறிப் போயிடும். அப்புறம் ரிலீஸ் ஆனாலும், மக்களை ஈர்க்காது என கோலிவுட்டில் பேசி வருகின்றனர். பாவம் அந்த இயக்குநரின் நிலைமை தான் படுமோசம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X