யாரையும் புடிச்சு தொங்கல.. குவியும் நெகட்டிவ் விமர்சனம்.. கடுப்பான பிரபலம்.. கண்டபடி விளாசல்!

சென்னை: ஹீரோவாக நடித்த படங்கள் ஓடாததால், மார்க்கெட் காலியாகி, தற்போது வில்லனாக நடித்து வரும் அந்த பிரபல நடிகர், நெட்டிசன்கள் செய்த கமெண்ட்டை பார்த்து கடுப்பாகி உள்ளார்.

ஃபீல்ட் அவுட் ஆகி மறுபடியும் கம்பேக் ஆகி உள்ள இரண்டு நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும் அந்த கேங்ஸ்டர் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.

அந்த படத்திற்கு சமூக வலைதளத்தில் குவியும் நெகட்டிவ் விமர்சனங்களை பொறுக்க முடியாமல் அந்த பிரபலம் கொதித்தெழுந்தது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தூக்கம் வருது

தூக்கம் வருது

இதற்கு முன் அந்த இயக்குநர் எடுத்த படத்தை நம்பி, தியேட்டருக்கு போன ரசிகர்களுக்கு, தூக்கம் தான் வந்துள்ளதாம். ஆமை போல நகரும் திரைக்கதையை பார்த்து, பார்த்து டயர்டாகி, ஒரு கட்டத்துக்கு மேலே, தியேட்டரில், பிஜிஎம் சத்தத்திற்கு மேலாக டிடிஎஸ் எஃபெக்டில் குறட்டை விடும் சத்தம் தான் கேட்கிறதாம்.

இந்த படமாவது

இந்த படமாவது

2020ம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து, இந்த வாரம் வரை வெளியான எந்த படமும், தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கு அசுர மொக்கை படங்களாக வாரம் வாரம் வந்து ரசிகர்களின், ஒவ்வொரு 200 ரூபாய்களாக ஆட்டையை போட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த படமாவது, இந்த ஆண்டின் வெற்றிப்படமாக அமையுமா என எதிர்பார்த்தால், அதுவும் பல்பு வாங்கி உள்ளது.

இயக்குநர் தான் காரணமாம்

இயக்குநர் தான் காரணமாம்

புதுசா படம் எடுக்கிறேன், வித்தியாசமா படம் எடுக்கிறேன் என்கிற பெயரில், ரசிகர்களின் ரசனையை உணராது, இழு இழுவென படத்தை இழுத்துள்ளாராம் அந்த இளம் இயக்குநர். தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களில், ஒருவராக வருவார் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இயக்குநர், இப்படி ஒரு படத்தை கொடுத்து, ஒரே அடியாக கடைசி இடத்திற்கு சென்றுள்ளார்.

ஃபேஷன் ஷோவா நடக்குது

ஃபேஷன் ஷோவா நடக்குது

கோட்டு, ஷூட்டு, கூலர்ஸ், கார், துப்பாக்கி இதை மட்டும் வச்சிக்கிட்டு, இங்கிட்டும், அங்கிட்டும், நடக்கிறதுக்கு, இங்கே என்ன ஃபேஷன் ஷோவா நடக்குது என ரசிகர்கள் தியேட்டரிலும், ட்விட்டரிலும் பங்கமாக கலாய்த்து வரும் சத்தம் இயக்குநர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்களின் காதுகளுக்கும் சென்றுள்ளது.

யாரையும் புடிச்சு தொங்கல

யாரையும் புடிச்சு தொங்கல

தொடர்ந்து வரும் நெகட்டிவ் விமர்சனங்களால், நொந்து போன அந்த பிரபல நடிகர், யாரையும் புடிச்சு தொங்கல, புடிச்சா பாருங்க, இல்லைன்னா விடுங்க என்ற ரேஞ்சுக்கு, நெட்டிசன் ஒருவரின் கமெண்ட்டுக்கு, ரிப்ளை போட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். உங்களோட நல்ல நடிப்புக்கு நிச்சயம் நல்ல படம் பண்ணுவீங்க பாஸ் என சில ரசிகர்கள், சமாதானம் படுத்துவது போல மீண்டும் கலாய்த்து வருகின்றனர்.

நீங்க வேண்டாம்

நீங்க வேண்டாம்

டாப் நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க, சமீபத்தில், இந்த பிரபல நடிகர் எடுத்த முயற்சிகள் எல்லாம் வீணானது. அந்த டாப் நடிகரின் படத்தில், தமிழ் சினிமாவுக்கு பரீட்சையமில்லாத வில்லன் நடிகரை தேடி வருகிறோம், அதனால், நீங்க வேண்டாம் என அந்த படத்தின் இயக்குநர் ரிஜெக்ட் செய்திருந்தார்.

நிச்சயம் ஜெயிப்பார்

நிச்சயம் ஜெயிப்பார்

தொடர்ந்து, நல்ல நடிப்பை வெளிகாட்டி வரும் அந்த பிரபல நடிகர், படம் குறித்து பாசிட்டிவ் விமர்சனங்களை சொல்லும், ஒவ்வொரு நெட்டிசனுக்கும், ஓடிப் போய் நன்றி தெரிவித்து வருகிறார். டாப் நடிகர் படத்தில் வாய்ப்பு மறுக்கப்பட்டாலும், அடுத்தடுத்து கை வசம் பல படங்கள் அவருக்கு இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரும் ஜெயிப்பார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X