ஜிம் ட்ரெய்னருடன் கடல் தாண்டி உறவில் இருக்கும் நடிகை?.. ஓஹோ இது வேற நடக்குதா?

By Staff

சென்னை: தற்போதைய தலைமுறையில் ஃபேமஸ் நடிகையாக வலம் வரும் அவர் ஜிம் ட்ரெய்னருடன் உறவில் இருக்கிறாராம்.

தற்போதைய நடிகைகளில் அந்த நடிகை ரொம்பவே ஃபேமஸ். பார்ப்பதற்கு க்யூட்டாகவும், ஹாட்டாகவும் இருக்கும் அவர் தென்னிந்திய மொழிகளில் கலக்கிவிட்டு வட மாநிலத்திலும் கலக்கிவருகிறார். முக்கியமாக அழகு மட்டுமின்றி நடிக்கவும் தெரியும் என்ற பெயரை அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே நிரூபித்தும்விட்டார். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Famous actress and is in a relationship with Gym Trainer

காதல்: நிலைமை இப்படி இருக்க கல்ட் களாசிக் படமாக உருவான ஒரு படத்தில் நடித்தபோது நடிகருடன் காதல் ஏற்பட்டது. ஆனால் முதலில் அந்த காதலுக்கு நடிகரின் குடும்பம் எதிர்ப்பு தெரிவித்தது. இருந்தாலும் கட்டினால் அவளைத்தான் கட்டுவேன் என்று ஒற்றை காலில் நடிகர் நின்றதால் குடும்பத்தினர் வேறு வழியின்றி சம்மதித்தனர். பெரிய இடத்து மருமகளாகப்போகிறோம் என்ற குஷியில் மிதந்தார் நடிகை. அதன்படி திருமணமும் நடந்தது.

திருமணத்துக்கு பின் நடிப்பு: பெரிய இடத்து மருமகள் என்றாலே சில விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று குடும்பத்தினர் எதிர்பார்ப்பார்கள். அதேபோல்தான் அந்த நடிகரின் குடும்பத்தினரும் நடிகை திருமணத்துக்கு பிறகு நடிப்பை விட வேண்டும் என்றார்களாம். ஆனால் தனக்கு காதல் கணவரின் சப்போர்ட் முழுதாக இருந்ததால் குடும்பத்தினர் போட்ட கண்டிஷனை உடைத்து தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்தார்.

எல்லை மீறிய நடிகை?: மகனின் சப்போர்ட் முழுக்க முழுக்க மருமகளுக்கு இருந்ததால் நடிகரின் அப்பாவும், அம்மாவும் அமைதி காத்துக்கொண்டிருந்தனர். அந்த அமைதி தனக்கான முழு சுதந்திரம் என்று தவறாக புரிந்துகொண்ட நடிகை ஒரு படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் நடித்தார். இது நடிகரை கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தது. அதனையடுத்து நடிப்பு போதும் வீட்டில் இருந்தபடி குடும்பத்தை கவனி என நடிகர் சொல்ல நடிகை ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் இருவரும் பிரிந்துவிட்டார்களாம்.

தொடர் ஃப்ளாப்: திருமண முறிவுக்கு பிறகும் நடிகை தொடர்ந்து நடித்துவருகிறார். ஆனால் அம்மணி நினைத்தது மாதிரி எந்த படமும் ஹிட்டாகவில்லை. குறிப்பாக அவர் நடிப்பில் கடைசியாக வெளியான படத்தில்கூட ரொம்பவே நெருக்கம் காட்டியிருந்தார். எனவே அவர்கள் இருவருக்கும் பத்திக்கிச்சு என்று கடந்த சில மாதங்களாகவே பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தலைவி இன்னொருவருடன் நெருக்கம் காட்டுகிறாராம். அவர் யார் என்றால் நடிகையின் ஜிம் ட்ரெய்னராம்.

வெளிநாட்டில்: அண்மையில்கூட நடிகை வெளிநாடு சென்றிருந்தார். அந்த நாட்டுக்கும் தன்னுடைய ஜிம் ட்ரெய்னரை தன் சொந்தக்காசை போட்டு கூட்டி சென்றாராம். அங்கு சென்ற அவர் ஜிம்மில் மட்டுமில்லாமல் பல இடங்களில் ட்ரெய்னரின் துணையோடு ஒர்க் அவுட் செய்து முடித்தாராம். அதேசமயம் இதை காதல் என்ற நிலைக்கு நகர்த்தி செல்லவும் நடிகை விரும்பவில்லையாம். ஒன்லி ஒர்க் அவுட்டுக்கு மட்டும் ஜிம் ட்ரெய்னரின் துணை போதும் என்ற மைண்ட் செட்டில் இப்போது இருக்கிறாராம். இதற்கிடையே நடிகையுடன் மீண்டும் சேரும் மைண்டுக்கு வந்தாலும் முன்னாள் காதலர். ஆனால் ஜிம் ட்ரெய்னருடன் நடிகை கிசுகிசுக்கப்படுவதை கேள்விப்பட்ட அவர் உடனடியாக தனது மைண்டையும் மாற்றிக்கொண்டாராம். இந்த டாபிக்தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X