அதே சம்பளம் தந்தால் தான் நடிப்பேன்… ஒத்தக்காலில் நிற்கும் தேவி நடிகை!
லெஜண்டின் பிரம்மாண்ட படத்தில் நடிக்க நம்பர் நடிகைக்கு தருவதாக கூறிய அதே அளவு சம்பளத்தை தந்தால் தான் படத்தில் நடிக்க சம்மதிப்பேன் என ஒத்தக்கால்ல நிற்கிறாராம் அந்த தேவி நடிகை.
சென்னை: சிவனேன்னு வியாபாரம் பார்த்துட்டு இருந்த அந்த வயதான லெஜண்ட்டை விளம்பர படங்களில் நடிக்க வைத்த அந்த இயக்குநர், தற்போது சினிமா ஆசையும் காட்டியுள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ள அந்த லெஜண்டுக்கு ஹீரோயின் கிடைப்பது தான் மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியுள்ளது.
லெஜண்ட் படத்தில் அத்தனை கோடி கொடுத்தும் நம்பர் நடிகை ஓகே சொல்லாததால், தேவி நடிகையிடம் அந்த படம் வந்துள்ளதாம்.

இத்தனை கோடியா?
லெஜண்ட் படத்தில் நடிக்க நம்பர் நடிகையிடம் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தன. ஒரு பெரிய தொகை சம்பளம் தருவதாக அழைப்பு விடுத்தும் தனது இமேஜ் பாதித்து விடுமோ என்ற பயத்தில் அதனை மறுத்துள்ளார் நம்பர் நடிகை.

கை மாறியது
நம்பர் நடிகை நடிக்க சம்மதம் தெரிவிக்காத நிலையில், அந்த பிரம்மாண்ட புராஜெக்ட் தேவி நடிகை கைக்கு மாறியுள்ளது. ஏற்கனவே விளம்பர படத்தில் அவருடன் நடித்துள்ளதால், படத்தில் நடிக்கவும் சம்மதித்துள்ளார். விரைவில் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.

அதிக சம்பளம்
லெஜண்ட் படத்தில் நடிக்க ஓகே சொன்ன தேவி நடிகை, தற்போது நம்பர் நடிகைக்கு கொடுப்பதாக சொன்ன அத்தனை கோடி ரூபாய் சம்பளத்தை தனக்கும் தந்தால் தான் படத்தில் நடிக்க சம்மதிப்பேன் என ஒத்தக் காலில் நின்று அடம்பிடிக்கிறாராம்.

குழப்பத்தில் லெஜண்ட்
இத்தனை கோடிக்கு இந்த நடிகையை புக் பண்ணலாமா அல்லது இளம் நடிகைகளையோ அல்லது அறிமுக நடிகைகளையோ அணுகலாமா என்ற குழப்பத்தில் லெஜண்ட் உள்ளாராம். மேலும், பல கோடி பட்ஜெட்டில் தனது படம் உருவானால், அது தனக்கு லாபத்தை தருமா தராதா என்ற கணக்கையும் போட்டு வருகிறாராம்.
இதனால் லெஜண்ட் நடிப்பில் உருவாக உள்ள அந்த பிரம்மாண்ட படம் டிராப் ஆவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











