twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்போ நான் அழகு இல்லையா.. கோபத்தின் உச்சியில் தேவி நடிகை!

    |

    சென்னை: வி நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள சண்டை படத்தில் இடம்பெற்றுள்ள அழகு பாடல் தேவி நடிகையை டென்ஷனாக்கி உள்ளதாம்.

    எப்போதுமே தன்னை இயக்குநர்கள் இரண்டாவதாகவே பார்க்கிறார்கள் என்றும், தங்கம் போல மின்னும் தான் அழகானவள் இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

    படம் ரிலீசாகவுள்ள நிலையில், இது என்னடா புதிய பூதம் கிளம்பியுள்ளது என்று இயக்குநர் பதட்டத்துடன் உள்ளாராம்.

    செகண்ட் ஹீரோயின்

    செகண்ட் ஹீரோயின்

    பெரிய படங்கள் என்றாலே சண்டை உள்ளிட்ட காட்சிகளில் நடிக்க பிரம்மாண்ட படங்களில் இந்த நடிகையை இயக்குநர்கள் புக் செய்கின்றனர். ஆனால், இவருக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லை என்பதால், செகண்ட் ஹீரோயினாகவே நடத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    மார்க்கெட் இல்லை

    மார்க்கெட் இல்லை

    அழகாக இருந்தாலும், அந்த தேவி நடிகைக்கு போதிய மார்க்கெட் இல்லாததே இதற்கு காரணம் என்று திரையுலகில் பரவலாக பேசிக் கொள்கிறார்கள். விரைவில் திரைக்கு வரவிருக்கும் அந்த சண்டை படத்திலும் தேவி நடிகையை விட அந்த லட்சுமிகரமான நடிகைக்குத்தான் அதிக முக்கியத்துவமாம்.

    ஓவர் ஆக்டிங்

    ஓவர் ஆக்டிங்

    பல வருடங்களாக ஹீரோயினாக நடித்து வந்தாலும், ஏன் அந்த தேவி நடிகையால் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பதற்கு காரணமாக இருப்பது அவரது ஓவர் ஆக்டிங் தான் என்கின்றனர். ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால், ஐநூறு ரூபாய்க்கு நடிக்கும் அந்த ஓவர் ஆக்டிங் தான் அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதாம். பாவம் வருவதை தானே செய்வார்.

    அழகு இல்லையா

    அழகு இல்லையா

    காமெடி படங்களை இயக்கி வந்த அந்த இயக்குநர் திடீரென பெரிய அளவு பட்ஜெட்டில் சண்டை படம் ஒன்றை உருவாக்கியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் இருந்து வெளியான அழகு பாடல், அம்மணியை அதிகளவில் அப்செட் செய்துள்ளதாம். இதுவரை தாம் தான் அந்த படத்தின் ஹீரோயின் என ரசிகர்கள் நம்பியிருந்த நிலையில், அந்த பாடல் வீடியோ வெளியான நிலையில், பலரும் அந்த லக்‌ஷ்மி கரமான நடிகைக்கு ரசிகர்கள் ஆனது தான் இந்த கோபத்திற்கான காரணமாம்.

    English summary
    Famous Actress get angry with her latest movie song lyrics contains beauty words in lyrics. But unfortunately another heroine of the film will score performance in that song.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X