குழந்தை வேணும்.. கள்ள உறவால் தினமும் டார்ச்சர் செய்த கணவர்.. வாழ்க்கையே போச்சு என புலம்பும் நடிகை!

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான அந்த நடிகை அழகு நடிகை, இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்கள்ல நடித்துள்ளார். அண்மையில், தான் இவருக்கு திருமணம் நடந்த நிலையில், தற்போது கணவனின் கள்ள உறவு தெரிஞ்சா காரணத்தால் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக ஜாம்பவான் நடிகர் youtube சேனலில் பேசி உள்ளார்.

அழகு நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அப்போது தான் விரல் நடிகர் ஒருவரின் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்த போது, இவருக்கும் காதல் கிசுகிசு உருவானது. அந்த விரல், நடிகரோ பல காதல் தோல்வியால் துவண்டு போய் இருந்ததால், இந்த நடிகையை நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று, தனது அப்பாவிடம் சொல்லி அனுமதியும் வாங்கி விட்டார். ஆனால், பிரச்சனை வேறு விதமாக மாறிவிட்டது. இவர்களின் காதல் விவகாரம், நடிகையின் அம்மாவிடம் ஒரு பிரபலம் போட்டு கொடுத்து, விரல் நடிகரை பற்றி தப்பு தப்பாக சொல்லி, கடைசியில் இந்த காதல் பிரேக்கப்பாகி விட்டது.

Gossip kisu kisu

படங்கள் இல்லை: அழகு நடிகையோ அம்மாவின் பேச்சை தட்டாதவர் என்பதால், இந்த காதலுக்கு முழுக்க போட்டுவிட்டு மறுபடியும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த அழகு நடிகைக்கு திடீரென பட வாய்ப்பு குறைந்து போனது. அதற்கு காரணம் நம்முடைய உடல்வாகுதான் என முடிவு செய்த அந்த அழகு நடிகை, திடீரென பலவிதமான உடற்பயிற்சி, டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைந்தார். ஆனால், அதன் பிறகும் நடிகைக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு வரவில்லை. இதனால் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போதும் வாய்ப்பு கிடைக்காததால், அம்மாவின் அட்வைஸ் படி திருமணத்திற்கு ரெடியானார்.

இரண்டே மாதத்தில் பிரிவு: அழகு நடிகை தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண மிகப்பெரிய அளவில் திரைபிரபலங்கள் வாய்ப்பு பிளந்து பார்க்கும் அளவில் நடைபெற்றது. ஆனால், திடீரென நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கணவரின் போட்டோக்களை டெலிட் செய்திருக்கிறார். இதை நோட் செய்த இணைவாசிகள் என்ன காரணம் என ஆராய்ந்து பார்க்கும் போது தான், அழகு நடிகைக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான சில நாட்களிலேயே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

கள்ள உறவு: இது குறித்து பேசிய ஜாம்பவான் நடிகர், அழகு நடிகையின் கணவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தை பெற்றவர். அந்தப் பெண் எதற்காக, எந்த காரணத்துக்காக விவாகரத்து செய்தார் என்பது யாருக்குமே தெரியாது. அழகு நடிகை, அவர் ஒரு தொழிலதிபர் என்பதனாலே அவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சினிவில் நடிக்க கூடாது, சீக்கிரமா குழந்தை பெத்துக்கணும் என அடுத்தடுத்து கணவர் டார்ச்சர் செய்துள்ளார். இதனால், அழகு நடிகைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, இதையடுத்து, நடிகை மூட்டை முடிச்சு எல்லாம் கட்டிக்கிட்டு அம்மா வீட்டிலேயே செட்டிலாகி விட்டார். அதன்பிறகு தான் இன்னொரு விஷயம் அழகு நடிகையின் காதுக்கு வந்துள்ளது. அதாவது அந்த வீட்டில் வேலை செய்யவும் வேலைக்காரர் ஒருவர், தொழிலதிபரான அழகு நடிகையின் கணவருக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருக்கு என்ற விஷயத்தை சொல்ல நிரந்தரமாகவே விவாகரத்து பெற்று பிரிந்து வாழ இருவரும் முடிவு செய்து இருப்பதாக ஒரு குண்டை தூக்கி போட்டுள்ளார் ஜாம்பவான் நடிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X