ஓவர் வாய்ப்பேச்சு... அந்த நடிகையை நைசாக கழட்டிவிட்டு வெளிநாடு பறந்த பிரம்மாண்ட படக்குழு!
இரண்டாம் பாகத்தில் தன்னை ஓரங்கட்டினர் என ஓவராக பேசியதால் அந்த பிரபல நடிகையை வெளிநாட்டு திரையிடலுக்கு கூட்டிச்செல்லாமல் நைசாக கழட்டி விட்டு சென்றுவிட்டதாம் அந்த பிரம்மாண்ட படக்குழு.
Recommended Video
சென்னை: பிரம்மாண்ட திரைப்படத்தை வெளிநாட்டில் திரையிட அந்த பிரம்மாண்ட திரைப்பட குழு வெளிநாட்டுக்கு பறந்தது.
ஆனால், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் சமயத்தில், தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என ஓவராக பேசியதால் அந்த தேவி நடிகையை நைசாக கழட்டி விட்டு படக்குழு கிளம்பியுள்ளதாம்.
மாபெரும் நிகழ்வில் தான் பங்கு கொள்ளாமல் போனதற்கு தனது ஓவர் பேச்சு தான் காரணம் என வீட்டில் புலம்பி வருகிறாராம் அந்த தேவி நடிகை.

சிறப்பு அந்தஸ்த்து
அரச குடும்பத்தால் கட்டப்பட்ட அந்த புராதனம் வாய்ந்த திரையரங்கில் திரையிடப்படும் முதல் ஆங்கிலம் அல்லாத திரைப்படம் என்ற அந்தஸ்த்தை அந்த பிரம்மாண்ட படம் பெற்றுள்ளது. சிறப்பு திரையிடலுக்காக வெளிநாடு சென்றுள்ள பிரம்மாண்ட குழு எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முதல் பாகம்
பிரம்மாண்ட படத்தின் முதல் பாகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், இரண்டாம் பாகத்தில் இன்னொரு பிரபல நடிகைக்கு சென்று விட்டதால், இயக்குநர் செயல் குறித்து பொதுவெளியில் அந்த தேவி நடிகை ஓவராக பேசி இருந்தார். அதனால், படம் குறித்த எந்த விழா மற்றும் நிகழ்சிகளுக்கும் அந்த நடிகையை அழைப்பதை இயக்குநர் தவிர்த்து வருகிறார்.

புலம்பல்
வெளிநாட்டில் திரையிடப்படும் தனது படத்தை தனது குழுவுடன் நேரில் சென்று காணமுடியவில்லை என்ற ஆதங்கத்தில் அந்த தேவி நடிகை தனது வீட்டிலேயே முடங்கியுள்ளாராம். எல்லாம் தனது ஓவர் வாய் பேச்சின் விளைவால் வந்ததுதான் என்றும் புலம்பி வருகிறாராம்.

லெஜண்ட் படத்தில் நடிப்பாரா?
சமீபத்தில் வெளியான சுதந்திர போராட்ட தியாகி படம் தனக்கு ஹிட் கொடுத்த நிலையில், 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ள லெஜண்ட் படத்தில் நடிக்க அம்மணிக்கு அழைப்பு வந்துள்ளது. பெரும் தொகையுடன் வந்த ஆஃபரை நம்பர் நடிகை ஒப்புக்கொள்ளாத நிலையில், தேவி நடிகை அந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











