twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரிக்கெட் வீரருடன் ரகசிய காதல்.. டேட்டிங் போன நடிகை.. இதென்னடா புதுக்கூத்து !

    By Staff
    |

    சென்னை : பிரபல நடிகை கிரிக்கெட் வீருடன் நெருங்கி பழகுவதாகவும் இருவரும் காதலிப்பதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

    மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஒரு ரொமான்டிக் திரைப்படத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் அந்த சுருட்டை முடி நடிகை.

    க்யூட்டான சிரிப்பு அழகான முகம் என முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில இடம் பிடித்துவிட்டார் அந்த நடிகை.

    டான்ஸ் வராதுன்னு சொல்லிட்டு இடுப்பை இந்த வெட்டு வெட்டுறாரே தர்ஷா டான்ஸ் வராதுன்னு சொல்லிட்டு இடுப்பை இந்த வெட்டு வெட்டுறாரே தர்ஷா

    படவாய்ப்பு இல்லை

    படவாய்ப்பு இல்லை

    முதல் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழில் ஒல்லி நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படம் ஓரளவுக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது. இதையடுத்து, தமிழில் படவாய்ப்பு வரும் எதிர்பார்த்தார் ஆனால், தமிழில் எதிர்பார்த்தது போல படவாய்ப்பு இல்லை.

    சம்பளத்தை உயர்த்தினார்

    சம்பளத்தை உயர்த்தினார்

    இதையடுத்து, தெலுங்கு பக்கம் சென்ற அந்த நடிகைக்கு பட வாய்ப்பு குவித்தன. இதையடுத்து தெலுங்கு, மலையாள படங்களில் மிகவும் பிஸியான நடிகையாக மாறினார். சமீபத்தில், தெலுங்கு படம் ஒன்றில், மருத்துவக்கல்லூரி மாணவியான நடித்திருந்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில், ஒரு லிப் லாக் காட்சியில் நடித்து அனைவரையும் வாய் பிளக்கவைத்து தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தினார் அந்த நான்கு எழுந்து நடிகை.

    தமிழுக்கு முழுக்கு

    தமிழுக்கு முழுக்கு

    பின்னர் நீண்ட இடைவேளைக்குப்பிறகு தமிழில் மீண்டும் வாரிசு நடிகருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஆனால், அந்த படமும் தோல்வியானதால், தமிழ் திரைப்படங்களுக்கு ஒரே அடியாக முழுக்கு போட்டுவிட்டார். இனி தமிழ் படமே வேண்டாம் பா சாமி என்ற முடிவுக்கே அந்த நடிகை வந்துவிட்டதாக தெரிகிறது. தற்போது அந்த நடிகை தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

    கிரிகெட் வீரருடன் காதலா?

    கிரிகெட் வீரருடன் காதலா?

    இந்நிலையில், இந்த நான்கு எழுத்து நடிகை கிரிகெட் வீரர் ஒருவருடன் நெருங்கி பழகி வருவதாகவும், அந்த வீரருடன் அவ்வப்போது டேட்டிங் செல்வதாகவும், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள அந்த நடிகை. நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும் எங்களுக்குள் காதல் இல்லை என தெரிவித்துள்ளார். சினிமா வட்டாரத்தில் இவர்களின் காதல் விவகாரம் தான் தற்போது பேசு பொருளாக உள்ளது.

    English summary
    Famous actress secret love affair with cricketer
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X