Don't Miss!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யு சர்டிபிகேட் வாங்கியாச்சு.. இனியாவது தன்னை ஏத்துப்பாங்களான்னு ஏங்கும் பிரபல நடிகை!
Recommended Video
சென்னை: அந்த நிர்வாண படத்தில் நடித்ததுக்கு அப்புறம் அம்மணியை யாரும் சீண்டுறது இல்லையாம். பாலிவுட்டில் கூப்பிட்டாலும், இதே போல டிரஸ் போடாம நடிப்பீங்களான்னு தான் கேக்குறாங்களாம்.
அப்படி நடிச்சிட்டீங்க இனி ஹோம்லியா, குடும்பப் பாங்கா எப்படி உங்களை நடிக்க வைக்கிறது. ஜனங்க உங்கள இனி இப்படி ஏத்துக்க மாட்டாங்கன்னு சில நெருங்கிய இயக்குநர்களும் நேரடியாகவே சொல்ல அந்த பிரபல நடிகை என்ன செய்றதுன்னே தெரியாம குழம்பி போயிருக்காங்களாம்.
ஏற்கனவே நடிச்சு முடிச்ச பறவை படத்துக்கு யு சர்டிபிகேட் கிடைச்சிருக்கிறதால, அந்த படத்தோட ரிலீசுக்கு அப்புறம் மறுபடியும் ரசிகர்கள் தன்னை ஏத்துப்பாங்கன்னு கணக்கு போட்டு வருகிறாராம் அந்த பிரபல நடிகை.
மரண பங்கம்.. மீரா மிதுனை இதற்கு மேல் வச்சு செய்ய முடியாது.. நெட்டிசன்ஸ் வேற லெவல்!
எல்லாம் போச்சு
எல்லாம் அந்த இயக்குநரை டைவர்ஸ் பண்ணின பாவம் தானாம். அதுவரைக்கும் இண்டஸ்ட்ரியில அவருக்கு இருந்த மவுசு எல்லாம் இப்போ காணாம போயிடுச்சின்னு புலம்பி வருகிறார் அந்த பிரபல நடிகை.
கல்லா கட்டவில்லை
ஒட்டுத் துணிக்கூட இல்லாம நடிச்சா எல்லாரும் தியேட்டருக்கு வந்து வாயை பிளந்துகுன்னு பார்ப்பாங்கன்னு அந்த நடிகை போட்ட பலே திட்டங்கள் எல்லாம் வீணாப்போச்சு. தியேட்டரில் கூட்டமே இல்லாததால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டவில்லையாம். இதனால், அடுத்தடுத்த வாய்ப்புகளை இழந்தது தான் மிச்சமாம்.
நம்பிக்கை
சீக்கிரமே ரிலீசாகப் போற அந்த பறவை படத்தின் மேல தான் இப்போதைக்கு பூரா நம்பிக்கையையும் அந்த பிரபல நடிகை வைச்சுருக்காராம். அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கலைன்னா இண்டஸ்ட்ரிய விட்டு வெளிய போகும் நிலைமைக்கு ஆளாகிடுவோமுன்னும் அந்த நடிகை ரொம்ப பயத்தில இருக்கிறதால, யு சர்ட்டிபிகேட் வாங்கியிருக்கிற அந்த படத்தின் மேல ரொம்ப நம்பிக்கை வச்சு எதிர்பார்த்துட்டு இருக்காராம்.
தப்பு பண்ணிட்டோமே
பறவை படத்தின் ரிலீஸ் தனக்கு மீண்டும் நல்ல இமேஜை கொடுக்கும் என எதிர்பார்த்துகிட்டு இருக்கிற அந்த நடிகை, தெலுங்கில் தேவையில்லாம அந்த சுய இன்ப காட்சியில நடிக்க ஒப்புக் கொண்டதை நினைச்சு மறுபடியும் பெரிய தப்பு பண்ணிட்டோமே என வருத்தப்படுகிறாராம். அந்த செய்தி பக்கத்து மாநிலத்துக்கும் பரவி இருப்பதால், இந்த பறவை படத்தை எப்படி ஓட வைக்கப்போறோம் என்றும் புலம்பி வருகிறார் அந்த பிரபல நடிகை.