கொழுந்துவிட்டு எரியும் குடும்ப பிரச்சனை... மன வேதனையில் பிரபல இயக்குநர் !
சென்னை : தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த பிரம்மாண்ட இயக்குநரின் குடும்பத்தில் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனையால் அவர் மிகுந்த மன வேதனையில் இருப்பதாக சினிமா வட்டாரத்தில் முனுமுனுக்கப்பட்டு வருகிறது.
கோலிவுட் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் எடுத்த அந்த இயக்குநர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து, டாப் இயக்குநர்களின் வரிசையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். கோலிவுட்டில் மட்டும் மாஸ் காட்டி வந்த பிரம்மாண்ட இயக்குநர் தற்போது டோலிவுட்டில் தனது தடத்தை பதிக்க திட்டமிட்டு தெலுங்கில் முன்னணி நடிகரின் படத்தை இயக்கி வருகிறார்..

குடும்ப பிரச்சனை
பல படங்களில் பிஸியாக இருக்கும் இந்த இயக்குநர் தற்போது குடும்ப பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார். கடந்த ஆண்டு தனது மூத்த மகளின் திருமணத்தை நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் நடத்தினார். கொரோனாவின் தாக்குதல் அப்போது தீவிரமாக இருந்ததால்,நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

ரிசப்ஷன் நிறுத்தப்பட்டது
இதையடுத்து, சென்னையில் மிகவும் பிரம்மாண்டமான முறையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தடபுடலாக ஏற்பாடு நடைபெற்றது. அதுமட்டும் இல்லாமல் 10 கோடிக்கு மேல் செலவு செய்திருந்த நிலையில், திடீரென ரிசப்ஷன் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விவாகரத்து முடிவு
இதையடுத்து, பிரம்மாண்ட இயக்குநரின் மூத்த மகள் கணவரை பிரிய முடிவெடுத்து விட்டதாகவும் திருமணமாகி 6 மாதங்களுக்கு பிறகு தான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சட்டம் இருப்பதால் அதற்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் ரிசப்ஷன் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் நினைத்து மிகுந்த மன வேதனையில் இயக்குநர் இருக்கிறாராம்.

மனவேதனையில் இயக்குநர்
அதுமட்டும் இல்லாமல், இளைய மகளும் அவரிடம் அனுமதி கேட்காமல் திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறாராம். இத்தனை நாட்களாக பொது நிகழ்ச்சிக்கு கூட தங்களது மகளை அழைத்து வராத இயக்குநரின் மகள் சினிமாவில் நடிப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் , இருமகள்களை நினைத்து கஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் பிரம்மாண்ட இயக்குநர் தவித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











