போச்சு மொத்தமும் போச்சு.. பழையபடி பஞ்சாயத்தைக் கூட்டிய காப்பி இயக்குநர்?.. செம கடுப்பில் பிரபலம்!
சென்னை: ஒரு பக்கம் ஹீரோவால் தலைவலி என்று பார்த்தால் இன்னொரு பக்கம் இயக்குநர் பழைய பன்னீர்செல்வமாக மாறி குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டாராம். இதனால், தயாரிப்பு தரப்பு பயங்கர தலைவலியை அனுபவித்து வருவதாக திடுக்கிடும் கிசுகிசுக்கள் கசிந்துள்ளன.
ஹீரோவின் ஓவர் பந்தாவை பார்த்து அந்த பெரிய தயாரிப்பாளரே கடுப்பாகி விட்டார் என்கின்றனர். இனிமே தான் மட்டும் தான் வசூல் சக்கரவர்த்தி என்கிற அளவுக்கு பில்டப் மேல் பில்டப் செய்து வருவது மட்டுமின்றி படப்பிடிப்பு தளத்தில் அவரது உதவியாளர்களுக்கு மட்டுமே சில கோடிகள் செலவாகிறதாம்.

அவரை விட ஒருபடி மேலே சென்று யாரு ஒஸ்தி எனக் காட்டும் போட்டியில் டைரக்டரும் பணத்தை தண்ணீர் போல செலவு செய்ய ஆரம்பித்த நிலையில், மீண்டும் தயாரிப்பாளர் தான் தலையில் துண்டு போட வேண்டிய சூழல் உருவாகிவிடும் என கோலிவுட்டில் பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.
ஓட்டைக் கை: இந்தியாவே வியக்கும் படத்தை எடுக்கிறேன் என சமீப காலமாக சில இயக்குநர்கள் காப்பி கதையை வைத்துக் கொண்டு பல கோடிகளை வீணாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், காப்பி இயக்குநர் இந்த முறையும் பல ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களை ஒரு மிக்சியில் போட்டு அரைத்து ஒரு ஃப்ரெஷ் ஜூஸை உருவாக்குகிறேன் என புதிய பெயருடன் ஏகப்பட்ட சர்க்கரையையும் ஐஸ் கட்டியும் அள்ளிப் போட்டு கிண்டிக் கொண்டிருக்கிறார். அவர் ஏற்கனவே ஓட்டைக் கை என்பது இண்டஸ்ட்ரிக்கே தெரிந்திருந்தாலும் வெற்றி கொடுப்பதால் தயாரிப்பாளர்களும் தலையாட்டி பொம்மையாகவே உள்ளனர்.
எகிறிய பட்ஜெட்: எப்போதுமே சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாகவே சில கோடிகளை ஏற்றி விடுவார். இந்த முறை சில நூறு கோடிகளை அசால்ட்டாக ஏற்றிவிட்டாராம். இதையறிந்த தயாரிப்பு நிறுவனம் இவன் நம்ம தலையில் துண்டு போடாமல் விடமாட்டான் போல என நினைத்து இப்போதே அலர்ட்டாக முயற்சி செய்ய உள்ளுக்குள் ஏகப்பட்ட பூகம்பம் வெடிக்க ஆரம்பித்து விட்டதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன. ஒரு முக்கிய புள்ளி தான் அனைத்து பிரச்னைகளையும் சுமூகமாக பேசி தீர்க்க போராடி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











