For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன பண்ணாலும் என்ன மட்டும் யாரும் கண்டுக்க மாட்றாங்க.. புலம்பும் வாரிசு நடிகை!

    |

    சென்னை: சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கூட அந்த வாரிசு நடிகையை யாரும் கண்டுக்கலயாம் அதான் மேடம் ஒரே அப்செட்.

    வோர்ல்ட் நடிகரின் வாரிசு நடிகையான அவர் நடித்த படங்கள் பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன.

    சரி படங்கள் தான் செட்டாகவில்லை, காதலாவது செட்டாகுமா என்று ஃபாரின் மாப்பிள்ளையை தேடிப் போனவருக்கு சில நாட்கள் லிவிங் டுகெதரில் இருந்து விட்டு அவரும் எஸ்கேப் ஆக மீண்டும் வேறு வழியில்லாமல் விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க முயற்சி செய்து வருகிறார் அந்த வாரிசு நடிகை.

    அந்த ரெண்டு பேருக்குத் தான் ரெஸ்பான்ஸ்

    அந்த ரெண்டு பேருக்குத் தான் ரெஸ்பான்ஸ்

    சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்ச்சியில், இந்த வாரிசு நடிகையும் சீவி சிங்காரிச்சு சென்றுள்ளார். ஆனால், நம்பர் நடிகைக்கும், பக்கத்து ஸ்டேட் மருமக நடிகைக்கும் தான் நிகழ்ச்சியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சுதாம்.

    யாரும் கண்டுக்கல

    யாரும் கண்டுக்கல

    இவரே வழிய போய் பேசினாலும், பிரபலங்கள் மட்டுமின்றி ரசிகர்கள் கூட இவரை யாருமே கண்டுக்கலயாம். அதனால் அம்மணி பயங்கர அப்செட்டில் இருக்கிறார்.

    எல்லாமே சொதப்பல்

    எல்லாமே சொதப்பல்

    ஏற்கனவே இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சொதப்பல் ஆன நிலையில், புதிய புதிய ரூட்களை போட்டுப் பார்த்த அம்மணிக்கு எல்லாமே சொதப்பலாக முடிந்து வருகிறதாம்.

    ஒரே நம்பிக்கை

    ஒரே நம்பிக்கை

    வி நடிகருடன் வாரிசு நடிகை நடிக்கும் அந்த கம்பேக் படம் மட்டுமே இவருக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை. அந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு ஹிட் கொடுக்கவில்லை என்றால், ரொம்ப கஷ்டம் தான்.

    யோசிக்கிறாங்க

    யோசிக்கிறாங்க

    மறுபடியும் திரைத்துறைக்கு வாரிசு நடிகை கம்பேக் ஆகியுள்ள நிலையில் மற்ற நடிகர்கள் தங்கள் படங்களில் புக் செய்ய மிகவும் யோசிக்கிறாங்களாம். ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த முன்னணி நடிகர்களின் படங்கள் எல்லாம் கல்லா கட்டாமல் முடங்கிப் போன நிலையில், மறுபடியும் இவரை ஜோடியாக்க வேண்டாம் என இவரது அழைப்புகளை ஏற்காமல் எஸ்கேப் ஆகி வருகிறார்களாம்.

    பிக் பிளான்

    பிக் பிளான்

    வோர்ல்ட் நடிகர் அரசியலில் முழு கவனத்தை செலுத்தி திரைப்படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டால், அந்த பிக் ஷோவை தானே எடுத்து நடத்தவும் அந்த டிவி நிறுவனத்துடன் பிக் பிளான் போட்டு வாரிசு நடிகை பேசி வருகிறாராம்.

    எங்க போய் முடியப்போகுதோ

    எங்க போய் முடியப்போகுதோ

    இப்படி பல மனக் கோட்டைகளை கட்டி வரும் அந்த வாரிசு நடிகைக்கு எப்போது நினைச்சது எல்லாம் நினைச்ச மாதிரி நடக்குமோ இதெல்லாம் எங்க போய் முடியப்போகுதோன்னு கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக இருக்கிறது.

    English summary
    World Actor daughter and talent actress in South India didn’t get a good response at the recent award function event. So the heir actress get upset deeply.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X