பிரபல நடிகையுடன் நைட் பார்ட்டி.. ஒல்லி இசையமைப்பாளர் லூட்டி.. இதென்னடா புது கூத்து !
சென்னை : ஒல்லி இசையமைப்பாளர் பிரபல நடிகையுடன் இரவு பார்ட்டியில் லூட்டி அடித்த விவகாரம் கோடம்பாக்கம் முழுக்க தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது.
முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார் ஒல்லி.
ஒல்லி இசையமைப்பாளர் தற்போது, கை வசம் பல பெரிய நடிகர்களின் படங்களை வைத்துள்ளார்.

அறிமுகம்
ஒல்லி நடிகரின் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார் அந்த ஒல்லி. ஒல்லி நடிகரின் மாமனாருக்கு நெருங்கிய சொந்தம் என்பதால் ஒல்லி நடிகரும், ஒல்லி இசையமைப்பாளரும் நகமும் சதையுமாக இருந்தனர். யார் கண்பட்டதோ தெரியவில்லை, சிவ நடிகருடன் ஒல்லி இசையமைப்பாளர் சேர்ந்துவிட, செம கடுப்பான ஒல்லி நடிகர் அந்த இசையமைப்பாளரின் தொடர்பை துண்டித்து விட்டார்.

முத்த சர்ச்சை
ஒல்லி இசையமைப்பாளர் திறமையான இசையமைப்பாளராக இருந்த போதும், அவர் சினிமாவுக்கு வந்ததுமே ஒரு நடிகையுடன் முத்த சர்ச்சையில் சிக்கினார். அந்த முத்த விவகாரம் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது. ஒரு வழியாக அந்த நடிகையுடனான தொடர்பை துண்டித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

பாடல் காப்பியா?
இதையடுத்து, திரைப்படங்களில் இசையமைப்பதில் கவனம் செலுத்திய அந்த ஒல்லி இசையமைப்பாளர். ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் ஒரு பெரிய நடிகரின் படத்திற்கு இசையமைத்து இருந்தார். அந்த பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும், பாடல் காப்பியா? என்ற சர்ச்சையிலும் சிக்கினார். பாவம் இவர் எது செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது.

இரவு பார்ட்டியில்
சமீபத்தில், ஒல்லி இசையமைப்பாளர், தேசிய விருது பெற்ற நாயகியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். அப்போதே, இருவர் குறித்தும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், இருவரும் நட்பு என்று கூறி சமாளித்து விட்டனர். ஆனால், தற்போது, அந்த நடிகையுடன் ஒல்லி இசையமைப்பாளர் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஒல்லி இசையமைப்பாளருக்கு திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் முடிவு செய்திருக்கும் இந்த நேரத்தில் , அந்த ஒல்லி கிசுகிசுவில் சிக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











