தொழிலதிபர் வீட்டு மருமகனாகும் இசையமைப்பாளர்?..வெளிநாட்டில் அடிக்கும் கூத்து.. உச்ச நடிகர்தான் காரணம்
சென்னை: கோலிவுட்டின் சென்சேஷனல் இசையமைப்பாளர் அவர். வரிசையாக படங்களை வைத்திருக்கும் அவர்; விமர்சனங்களை சந்தித்தாலும் மார்க்கெட்டை இழக்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க தொடர்ந்து சிங்கிளாக இருக்கும் இசையமைப்பாளர் இப்போது கமிட்டாகிவிட்டாராம். அதுவும் பெரிய வீட்டு மருமகனாகப்போகிறார் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கள் கிளம்பியிருக்கின்றன.
சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர் அந்த இசையமைப்பாளர். தனது உறவினர் ஒருவரின் துணையோடு முதல் பட வாய்ப்பை பெற்ற அவர்; அந்தப் படத்திலேயே தனது திறமையை நிரூபித்துவிட்டார். அதில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து ஒரே நைட்டில் அவரை ஒபாமாவாக்கியது. இதனால் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
அத்தனை பேரும் ஸ்டூடியோவில்: அப்படி கிடைத்த வாய்ப்புகளை அவர் ஏனோதானோவென பயன்படுத்தவில்லை. ஒவ்வொரு படத்திலும் தனது 100 சதவீத உழைப்பை போட்டார். இதனால் அவர் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாகின. ஒருகட்டத்தில் அவர் இசை இல்லாமல் ஒரு படமும் ரிலீஸாகாது என்ற நிலைமையும் உருவாகிவிட்டது. அதிலும் உச்ச நடிகர்கள் முதல் வளர்ந்துவரும் நடிகர்கள்வரை அனைவருமே அவரது இசைக்காக ஸ்டூடியோவில் காத்திருந்தார்கள்.

விமர்சனங்கள்: சரசரவென்று வளர்ந்தால் அந்த வளர்ச்சியுடன் சேர்ந்து விமர்சனமும் வளரும்தானே. அதன்படி இவரது இசைக்கும் விமர்சனங்கள் வந்தன. அதாவது ஒரே இசையை மாற்றி மாற்றி பயன்படுத்துகிறார். இவர் வந்த பிறகுதன் பாடல் வரிகளுக்கு வேல்யூவே இல்லாமல் போய்விட்டது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனாலும் அந்தக் குதிரை எதற்கும் கட்டுப்படாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது.
பெண்கள் விஷயத்தில்: விமர்சனம் ஒருபக்கம் இருக்க மறுபக்கம் கிசுகிசுக்களும் எழுகின்றன. முக்கியமாக பெண்கள் விஷயத்தில் அவரது பெயர் ரொம்பவே டேமேஜ் ஆனது. முதலில் ஒரு நடிகையுடன் நெருக்கமாக இருந்துவிட்டு பிறகு ஒரு பாடகியுடன் டேட்டிங் செய்தார். ஆனால் அந்தப் பாடகியையும் ஒரு லெவலுக்கு மேல் கழற்றிவிட்டுவிட்டார். இந்நிலையில் அவர் பற்றி புதிய கிசுகிசு ஒன்று கிளம்பியிருக்கிறது.
என்ன ஆனது?: அதாவது மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் மகளுக்கும் இசையமைப்பாளருக்கும் பற்றிக்கொண்டதாம். முதலில் இது செட் ஆகாது என்றுதான் இரண்டு குடும்பத்தினரும் நினைத்தார்களாம். ஆனால் அவர்களது பழக்கம் ஸ்ட்ராங்கானது மட்டுமின்றி உச்ச நடிகரும் தொழிலதிபரிடம், 'நல்ல பையன். என்னை நம்பி பொண்ணை கொடுங்க. நம் இரண்டு குடும்பமும் உறவுக்காரர்களாக ஆகிவிட்டால் இன்னும் பல விஷயங்களை சாதிக்கலாம்' என நேரடியாகவே பேசினாராம்.
விரைவில் அறிவிப்பு: முதலில் தயங்கிய தொழிலதிபர் தரப்பு; உச்ச நடிகரே நேரடியாக பேசியதால் சம்மதம் சொல்லிவிட்டதாம். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு வீட்டிலும் க்ரீன் சிக்னல் கிடைத்ததை அடுத்துதான் அந்த பெண்ணும், இசையமைப்பாளரும் வெளிநாட்டுக்கு ஒன்றாக சென்றிருக்கிறார்களாம். அங்கு பல விஷயங்களை அவர்கள் சேர்ந்து ரசித்துவருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications










