அந்த ஒரு காரியத்தால உள்ளூருலேயே பயங்கர எதிர்ப்பாம்.. ஓவராதான் போயிட்டோமோ.. புலம்பும் பிரபலம்!

Recommended Video

அந்த மாரி படம் தான் கிடைக்குது புலம்பும் நடிகைகள்

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபின் பாராட்டுகள் குவியும் என எதிர்பார்த்த பிரபலத்திற்கு கிடைத்தது பெரிய ஏமாற்றம்தானாம்.

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான 100 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் பக்கத்து நாட்டு பிரபலம் ஒருவர். நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கடலை என ஜாலியாக இருந்தார்.

ஆரம்பத்தில் மக்களால் தங்கள் வீட்டு குழந்தையை போல் பார்க்கப்பட்டார். நாளாக நாளாக அவரது சுயரூபம் வெளிப்பட கடுப்பான மக்கள், வெறுப்பாக பேச தொடங்கிவிட்டனர்.

எல்லை மீறியது

எல்லை மீறியது

கூட்டுக் குடும்பமாக இருந்த பெரிய வீட்டில் கடலையை தாண்டி காதலும் வந்தது அந்த பிரபலத்திற்கு. வசனங்களும் நடவடிக்கையும் எல்லை மீறியது. இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார்.

மிதப்பில் இருந்தார்

மிதப்பில் இருந்தார்

ஆனாலும் வாரம்தோறும் காப்பாற்றப்பட்டதால் நமக்கென ரசிகர்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆதரவு உள்ளது என்ற மிதப்பில் இருந்தார். முதலாளிக்கு முன்பே கால் மேல் கால் போட்டு ஆட்டி வேறு காண்பித்து தனது ஆட்டிட்யூடை காட்டினார்.

ஏமாற்றம்தான்

ஏமாற்றம்தான்

பிரபலமாகிவிட்டோம்.. வந்த ஊரில் இல்லாவிட்டாலும் பிறந்த ஊரில் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையில் ஊர் சென்றாராம் அந்த பிரபலம். வீட்டிற்கு சென்றதும் வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும் என்று காத்திருந்தாராம். ஆனால் எதிர்பார்த்தது போன்று எதுவும் நடக்க வில்லையாம்.

வசவுகள்தான்

வசவுகள்தான்

மாறாக பெரிய வீட்டில் செய்த ஒரு காரியத்தால் மக்களின் வெறுப்புதான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டாராம். பக்கத்து நாட்டில் போய் மானத்தை வாங்கிவிட்டார் என்ற ரீதியில் வசவுகள் விழுகிறதாம்.

புலம்பி வருகிறார்

புலம்பி வருகிறார்

அதீத நம்பிக்கையில் இருந்த வேலையையும் விட்டதால், ஓவராதான் போயிவிட்டோமோ கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாமோ என புலம்பி வருகிறாராம். மேலும் பிரபலபடுத்திய சேனலிடமும் வாய்ப்பு கேட்டு பேசி வருகிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X