கட்சியில் சேர்ந்தால் நடிகர் சங்கத் தேர்தலில் ஆதரவு... ‘வளர்ந்த’ நடிகருக்கு வலை!

சமீபகாலமாக நடிகர் சங்க விசயங்களில் அதிகம் மூக்கை நுழைத்து வரும் உயர்ந்த நடிகருக்கு பிரபல கட்சியில் இருந்து அழைப்பு வந்துள்ளதாம்.

ஆடு பகை, குட்டி உறவு என்ற வகையில் நடிகர் சங்கத் தலைவருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறார் இந்த நடிகர். இந்நிலையில் சமீபத்தில் குடும்பச் சண்டை காரணமாக கட்சியின் வீழ்ச்சியால் கலங்கிப் போயிருக்கிறார் மூத்த கட்சித் தலைவர். பூ நடிகையும் கட்சியிலிருந்து வெளியேறி விட்டதால், பிரபல சினிமா நட்சத்திரம் யாரையாவது தங்களது கட்சிக்குள் கொண்டு வந்து மீண்டும் பரபரப்பை உண்டாக்க வேண்டும் என கட்சி மேலிடம் திட்டமிடுகிறதாம்.

அதன்படி, தங்களது வலையை தற்போது உயர்ந்த நடிகருக்கு கட்சி விரித்துள்ளதாம். அடுத்து நடிகர் சங்கத் தேர்தலுக்கு நடிகர் நின்றால் தங்களது ஆதரவு நிச்சயம் உண்டு என தூது அனுப்பியுள்ளதாம் கட்சி.

ஆனால், அதற்குக் கைமாறாக தங்களது கட்சியில் நடிகர் இணைய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாம். அவ்வாறு கட்சியில் சேர்ந்தால் உரிய முக்கியத்துவம் தரப்படும் என்றும், கட்சியில் சேர சம்மதமா என தூது அனுப்பப் பட்டுள்ளதாம்.

தன் பட பெயரால் பிரச்சினையில் சிக்கி மருத்துவமனை வரை போய் திரும்பிய நடிகர் மேற்கொண்டு என்ன முடிவெடுக்கப் போகிறார் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X