விவகாரமான மாத்திரை.. மயங்கி விழுந்த தொகுப்பாளினி..மானத்தை காப்பாத்திய டாக்டர் நடிகை!

By Staff

சென்னை: சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வந்த ஒல்லி தொகுப்பாளினி தற்போது சினிமாவிலும் கணிசமான படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.

நுனி நாக்கு ஆங்கிலத்தில் பீட்டர் விடாமல், சிரிக்க சிரிக்க தமிழ் பேசி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் இந்த தொகுப்பாளினி. எந்த டாப் நடிகர், நடிகைகள் வந்தாலும் இவர் இருந்தால் ஒகே என்று நினைக்கும் அளவிற்கு அவர்களுடன் எதார்த்தமாக பேசக்கூடியவராக இருந்ததால், அனைத்து நடிகர்களுக்கும் பிடித்தமானவராகவே இருந்தார்.

famous television host fainted at a night party

அப்படி பிடித்தமானவராக இருந்ததால், ஒல்லி நடிகருடன் பழக்கம் ஏற்பட்டு, அது பெரிய பஞ்சாயத்தில் போய் முடிந்தது. இந்த விவகாரத்தால் சின்னத்திரையில் இவருக்கு இருந்த நல்ல பெயர் கெட்டுப்போனது தான் மிச்சம்.

விவாகரத்து: இதையடுத்து, பிரபல தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அதுபோல திருமணத்திற்கு பின்பும், பழைய உறவை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்ததால்,குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்தார். திருமணத்திற்கு பிறகு ஒரு சில படத்தில் நடித்து வந்த அந்த ஒல்லி தொகுப்பாளினி தற்போது, யாருக்கும் தெரியாமல் ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இரண்டாம் திருமணம்: திருமணத்தை விமர்சையாக செய்தால்தானே சிக்கல், ஒருவேளை நாளை பிரச்சனை ஏற்பட்டு கணவரை மீண்டும் பிரிய நேர்ந்தால் பெரிய பிரச்சனையாகும் என்பதாலும், மீண்டும் மீடியாக்களில் பெயர் அடிபட்டு குடும்ப மானமே போய்விடும் என்று கணவரிடம் ஏதேதோ சாக்கு சொல்லி இரண்டாம் திருமண ரகசியத்தை வெளியில் கசியவிடாமல் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் அந்த ஒல்லி தொகுப்பாளினி.

விவகாரமான மாத்திரை: இரண்டாம் திருமணத்திற்கு பின் உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை சொல்லிவிட்டு சின்னத்திரையில் இருந்து ஒதுங்கி ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் ரகசியத்தை பாதுகாத்து வருகிறார். கணவர் ஒரு புறம் சம்பாதித்து கொட்ட, ஒல்லி தொகுப்பாளினியோ மீண்டும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பார்ட்டி பார்ட்டி என்று அலைந்து கொண்டு இருக்கிறாராம். அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்து இருக்கும் இவர், படுக்கை அறை சமாசாரத்தில் சும்மா கில்லியாக இருக்க வேண்டும் என்பதற்காக விவகாரமான மாத்திரையை அண்மைக்காலமாக அவர் பயன்படுத்தி வருகிறாராம்.

சுயநினைவை இழந்த தொகுப்பாளினி: இந்நிலையில், கடந்த வாரம் நைட் பார்ட்டிக்கு வாட்டசாட்டமான நடிகருடன் சென்று இருக்கிறார். அப்போது, கசமுசா விவகாரத்திற்காக பயன்படுத்தும் மாத்திரையை பயன்படுத்தி உள்ளார். ஏற்கனவே பார்ட்டியில் அடித்த சரக்கு, கசமுசா மாத்திரையை சாப்பிட்டதால், ஓவர் டோஸாகி போக அங்கேயே மயங்கி விழுந்து இருக்கிறார். இதைப்பார்த்து பதறிப்போன வாட்டசாட்டமான நடிகர், விஷயம் வெளியில் தெரிந்தால் மானமே போய்விடும் என்று டாக்டர் நடிகைக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி உதவி கேட்டுள்ளார்.

யாருக்கும் தெரியாமல் சிகிச்சை: டாக்டர் நடிகை கொடுத்த அறிவுரையின் பேரில், அவருடைய மருத்துவமனையிலேயே யாருக்கும் தெரியாமல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கடுமையான சிகிச்சைக்கு பின் ஒல்லி தொகுப்பாளினி தற்போது சுய நினைவுக்கு திரும்பி உள்ளார். இந்த விவகாரம் அந்த டாக்டர் நடிகை மூலமாகவே சின்னத்திரை வட்டாரத்தில் பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X