மனைவியை விவகாரத்து செய்த தொகுப்பாளர்.. நடிகையுடன் ரகசிய உறவு.. போட்டோவால் வெளிவந்த உண்மை!
சென்னை: சின்னத்திரையில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தன் மூலம் பிரபலமானவர் தான் அந்த தாடி தொகுப்பாளளர். திறமையான தொகுப்பாளரான இவர் தனது திறமையால் பல திரைப்படங்களில் நடித்து தற்போது நடிகராகவும் வலம் வருகிறார். ஆனால், சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு வெள்ளித்திரையில் கிடைக்காததால் தொடர்ந்து சின்னத்திரையிலேயே பல காமெடி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சரியான நேரத்தில் கேள்வி கேட்பது, அதே நேரத்தில் டைமிங்கில் கலாய்ப்பது இவருக்கு கை வந்த கலை.
தாடி தொகுப்பாளருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் தாடி தொகுப்பாளர் மனைவியை பிரிந்து வாழ்த்து வருகிறார். இந்த நேரத்தில் தான் இசை குடும்பத்தை சேர்ந்த நடிகை ஒருவருடன் தொழில் ரீதியாக சந்திப்பு ஏற்பட்டுள்ளது. அது பின்னாளில் காதலாக மாறி உள்ளது. அந்த நடிகையும் ஏற்கனவே திருமணமானவர், கணவருடன் கருத்து மோதல்கள், பல வன்கொடுமைகளை சந்தித்த அந்த நடிகை அதில் இருந்து மீண்டு வெளியேறி தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நேரத்தில் தான் தாடி தொகுப்பாளருடன் பழக்கம் ஏற்பட பின் இருவரும் ஒரே வீட்டில் ரகசியமாக வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள்.

நடிகையுடன் ரகசிய உறவு: தாடி தொகுப்பாளரும், நடிகையும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பது அவர்களின் நெருங்கி நண்பர்களுக்கு தெரிந்திருந்தாலும் வெளி உலகத்திற்கு யாருக்கும் தெரியவில்லை. இந்த நேரத்தில் தாடி தொகுப்பாளரும் நடிகையும் ஒரு நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் நடிகையின் கையில் குழந்தை இருந்ததால் பலரும் இவர்களுக்கு எப்போது திருமணம் நடந்து என கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். அந்த நடிகை இப்போது பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் நடித்து வருவதால், கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அதற்கு பதில் அளித்திருக்கும் அந்த நடிகை, நாங்கள் நண்பர்கள் மட்டும் தான் என சொல்லி உண்மையை மூடிமறைத்துள்ளார். அதற்கு காரணம் தாடி தொகுப்பாளருக்கு இன்னும் முறைப்படி விவகாரத்து கிடைக்கவில்லையால், இதனால், விவகாரத்து கிடைக்கும் வரை இருவரும் தங்களது உறவை ரகசியமாக வைத்து இருக்க நினைத்து இருந்தார்கள். ஆனால், அதற்குள் போட்டோ வெளியாகி குட்டையை குழப்பி விட்டது என அந்த தாடி நடிகர் தனது நண்பர்களிடம் புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











