வில்லனாக மாறி வரும் வி நடிகர்.. ஹீரோயிசம் ஒர்க்கவுட் ஆகலையா?

Recommended Video

வில்லனாக மாறி வரும் வி நடிகர்-வீடியோ

பெரிய நடிகர்களின் படங்களில், வில்லனாக நடிக்க அந்த வி நடிகரையே அணுகி வருகின்றனர். நட்புக்காகவே பல படங்கள் செய்து வரும் அந்த நடிகரும், ஹீரோவாக நடிப்பதை விட்டு விட்டு வில்லனாக நடித்து வருகிறார்.

சென்னை: பெரிய நடிகர்களின் படங்களில், வில்லனாக நடிக்க அந்த வி நடிகரையே அணுகி வருகின்றனர். நட்புக்காகவே பல படங்கள் செய்து வரும் அந்த நடிகரும், ஹீரோவாக நடிப்பதை விட்டு விட்டு வில்லனாக நடித்து வருகிறார்.

மேலும், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள், சமீப காலமாக தோல்வி அடைந்து வரும் நிலையில், இதுபோன்ற வில்லன் கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டாராம்.

ஃபிட் இல்லை

ஃபிட் இல்லை

ஹீரோவாக இருக்க வேண்டும் என்றால், ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி, நீண்ட காலமாக சினிமாவில் நிலவி வருகிறது. ஆனால், சில நடிகர்கள் மட்டுமே அந்த விதியை மீறி நடித்து ஹிட் கொடுத்து வருகின்றனர். ஆனால், கொஞ்ச நாளுக்கு பிறகு ஃபிட் இல்லாத நடிகர்களை, ஹீரோவாக மக்கள் விரும்புவதில்லை என்பதும் இங்கே நிதர்சனமான உண்மை.

ஃப்ளாப்

ஃப்ளாப்

அந்த பிரபல வி நடிகர், ஹீரோவாக நடித்து வரும் படங்கள் ஆறில் ஒன்று தான் வெற்றி அடைகிறதாம். மற்ற படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. ஆரம்பத்தில், தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையில், முன்னணி நடிகராக வேகமாக வளர்ந்த அந்த நடிகர், தற்போது, ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறாராம்.

ஃப்ளாப்

ஃப்ளாப்

அந்த பிரபல வி நடிகர், ஹீரோவாக நடித்து வரும் படங்கள் ஆறில் ஒன்று தான் வெற்றி அடைகிறதாம். மற்ற படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. ஆரம்பத்தில், தொட்டதெல்லாம் வெற்றி என்ற நிலையில், முன்னணி நடிகராக வேகமாக வளர்ந்த அந்த நடிகர், தற்போது, ஹிட் கொடுக்க முடியாமல் திணறி வருகிறாராம்.

பயம்

பயம்

பண்டிகை தினங்கள் மற்றும் பெரிய நடிகர்கள் படம் வந்தால், அந்த படங்களோடு தன்னுடைய படத்தை வெளியிட பயந்து வருகிறாராம் அந்த வி நடிகர். ஆனால், அதற்கு நட்புக்காக ஒதுங்கி கொள்கிறேன் என்ற போலி வேஷமும் போட்டு வருகிறார் என கோலிவுட்டில் பலரும் பேசி வருகின்றனர்.

வில்லாதி வில்லன்

வில்லாதி வில்லன்

ஹீரோவாக அவர் நடிப்பதை விட வில்லனாக கச்சிதமாக நடிப்பதால், தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களில் வில்லனாக கமீட் ஆகி வருகிறார். வில்லன் கதாபாத்திரத்திற்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அழைப்பு விடுக்கும் போதும், அவரும் தயங்காது, வருமானம் வருகிறதே என ஒப்புக் கொள்கிறாராம். வருமானத்திற்கு வருமானமும் ஆயிற்று மகா நடிகன் என்ற பெயரும் கிடைத்து விடுகிறதே இது போதாதா என தன்னையே சமாதானம் செய்து கொள்கிறாராம்.

எதிர்பார்ப்பு இல்லை

எதிர்பார்ப்பு இல்லை

பெரிய பண்டிகைக்கு பயந்து ஒதுங்கிய அந்த படம், இம்மாதம் ரிலீசாகிறது என்ற ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவரது ரசிகர்கள் மத்தியிலேயே அந்த படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையாம்.

மாறாக மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் வில்லனாக அவரை காணவே அவரது ரசிகர்கள் விரும்புகிறார்களாம். இப்படியே போனால், முழுமையாக வில்லனாகவே மாறிவிடுவேனோ என அந்த நடிகர் நினைத்து புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X