தாலி கட்டி ரகசிய குடித்தனம்.. பெரிய நடிகர் செய்த அசிங்கம்.. வீதிக்கு வந்த குடும்பமானம்!
சென்னை: அக்கட தேசத்தில் இருந்து தமிழ் நாட்டுக்கு படவாய்ப்பு தேடி வந்த அந்த நடிகைக்கு, தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பொதுவாக நம் தமிழ் ரசிகர்களுக்கு வெள்ளையா, கொழுக்கு மொழுக்குனு இருந்தால், பிடிக்கும் என்பதால், இந்த புசு புசு நடிகையை கொண்டாடினார்கள். இதனால், இந்த அம்மணி சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே உச்சத்திற்கு சென்றுவிட்டார்.
இந்த புசுபுசு நடிகை, பெரிய நடிகரின் வாரிசுடன், ஒருவரின் படத்தில் அவருடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடியது மட்டுமில்லாமல் பல விருதுகளையும் பெற்றுத்தந்தது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, புசுபுசு நடிகையும் அந்த வாரிசு நடிகரும் பல படத்தில் இணைந்து நடித்தார்கள். இவர்களின் காமினேஷன் ரசிகர்களுக்கு பிடித்து இருந்தது. இந்த காமினேஷன் ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்க வில்லை, இவர்களுக்கும் பிடித்து போக இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

புசு புசு நடிகையுடன் காதல்: பெரிய நடிகரின் வாரிசான அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த போதும், புசு புசு நடிகை காதலித்தது மட்டுமில்லாமல், அவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டு யாருக்கும் தெரியாமல் இருவரும் தனிக்குடித்தனமும் நடத்தி உள்ளனர். இந்த விஷயம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளானதைத் தொடர்ந்து, இது பெரிய நடிகரின் காதுக்கு வர, அவர் காதும் காதும் வைத்த மாதிரி புசுபுசு நடிகையின் வீட்டுக்கு சென்று, நான் யார் தெரியுமா, என் புகழ் என்னனு தெரியுமா... உனக்கு என் மகன் கேக்குதா..என்று மிரட்டி உள்ளார். ஒழுங்கா தமிழ் நாட்டுல இருக்க வேண்டும் என்றால், என் மகனை விட்டு விலகிவிடு என்று மிரட்டி உள்ளார்.
கண்ணீருடன் நின்றார்: பெரிய நடிகரே இப்படி கூறியதால், அதிர்ந்து போன அந்த நடிகை, கண்ணீரும் வாரிசு நடிகரிடம் கேட்க, அவரும் அப்பா சொல்வதுபடி கேட்டால் தான், அவரது சொந்தில் பங்கு கிடைக்கும், சினிமாவில் நல்ல பெயரும் இருக்கும் என்று சொல்லி, அந்த புசுபுசு நடிகையை கை கழுவி விட்டார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த புசுபுசு நடிகை என்ன செய்வது என்று தெரியாமல், தற்கொலை வரை சென்றார். இதைத்தொடர்ந்து, அதில் இருந்து மீண்ட அந்த நடிகை நீண்ட நாட்களுக்கு பிறகு, ஒரு இயக்குநரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
வீதிக்கு வந்த குடும்ப மானம்: தற்போது, அதே பெரிய நடிகரின் மற்றொரு மகனும், பிரபலமான நடிகை ஒருவரின் சகோதரியை ஏமாற்றி குடும்பம் நடத்திவிட்டு, ஒரு மகன் பிறந்த பிறகும் அந்த பெண்ணை முறைப்படி மனைவி என சொல்லாமல் ரகசியமாக வாழ்ந்துள்ளார். இந்த விஷயம் தற்போது அவரின் மகன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த விஷயம் குறித்து பேசிய சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர், புசு புசு நடிகைக்கு நடந்த கொடுமையும், மற்றொரு பெண்ணுக்கு நடந்த கொடுமை குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார். குடும்பம், பாரம்பரியம், சொத்து என அனைத்தையும் காப்பாற்ற, பெரிய நடிகர் இப்படி அசிங்கமான பல வேலைகளை செய்து தனது வாரிசுகளை பாதுகாத்து வந்தார். தற்போது அந்த பெரிய நடிகர் உயிரோடு இல்லாததால்,குடும்ப மானம் வீதிக்கு வந்துவிட்டது என்று பேசுகின்றனர்.


Click it and Unblock the Notifications











