எங்களை மதிக்கவில்லை.. புறந்தள்ளுகிறார்.. மாஸ் நடிகர் மீது கடும் கோபத்தில் ரசிகர்கள்!
முன்னணி மாஸ் நடிகர் ஒருவர் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை புறக்கணித்து வருவதால் அவரின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
Recommended Video
சென்னை: முன்னணி மாஸ் நடிகர் ஒருவர் தொடர்ந்து தன்னுடைய ரசிகர்களை புறக்கணித்து வருவதால் அவரின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
கோலிவுட்டில் டாப் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அவர். எல்லா பெரிய ஹீரோக்களை போலவே இவருக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.
பேனருக்கு பால் ஊற்றுவது தொடங்கி பெரிய பெரிய கட் அவுட் வைப்பது, சமூக வலைத்தளங்களில் களமாடுவது என்று இவர் ரசிகர்கள் எப்போதும் ஆக்ட்டிவாக இருப்பார்கள்.

ஆனால் என்ன
ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இவர் கொஞ்சம் கொஞ்சமாக தனது ரசிகர்களிடம் இருந்து விலக தொடங்கினார். ரசிகர்களை சந்திப்பதை நிறுத்திக் கொண்டார். அப்படியே தான் இருப்பதையே வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்து வந்தார்.

மிக மோசம்
இதை எல்லாம் சகித்து கொண்ட ரசிகர்கள் தொடர்ந்து அவரை கொண்டாடி வந்தனர். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தொடர்ந்து அவரின் பக்கத்திலேயே ரசிகர்கள் நின்றார்கள். எதிரி நடிகர்களின் ரசிகர்கள் கிண்டல் செய்யும் போது கூட இவரின் ரசிகர்கள் எப்போதும் போல அந்த நடிகரை சப்போர்ட் செய்து கொண்டுதான் இருந்தனர்.

என்ன கோபம்
ஆனால் இப்போது அந்த நடிகர் செய்த காரியம் ஒன்று அவரின் ரசிகர்களையே கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ரசிகர்களை மொத்தமாக தவிர்க்கும் பொருட்டு அவர் ஒரு விஷயத்தை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இதை பார்த்து அவரின் உயிர் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.

ரொம்ப அதிர்ச்சி
முன்பெல்லாம் அந்த நடிகர் கொஞ்சமாவது ரசிகர்களிடம் பேசுவார். இனி அதுவும் கிடையாது. அவர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை விட்டு விலகி செல்கிறார். ஏன் எங்கள் அன்பை அவர் இப்படி புறந்தள்ளுகிறார் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











