நடிகர், பெண் பிரபலம் இடையே அதிகரிக்கும் நெருக்கம்: சந்தேகப்பட்டது சரியாப் போச்சு

By Siva

சென்னை: நடிகர் ஒருவர் தனது காதல் மனைவியை பிரிந்தபோதே அதற்கு யார் காரணம் என்று சந்தேகப்பட்டோமோ அது தான் நடந்துள்ளது என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

பிரபல நடிகர் ஒருவர் தனது காதல் மனைவியை பிரிவதாக அறிவித்தார். அவர்கள் பிரிவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அவர் அறிவிப்பு வெளியிட்ட கையுடன் அந்த பிரிவுக்கு ஒரு பிரபலம் தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் பேசத் துவங்கினார்கள்.

இந்நிலையில் நடிகருக்கும், அந்த பிரபலமான பெண்ணுக்கும் இடையேயான நட்பு மிகவும் நெருக்கமாகியுள்ளது.

நடிகர்

நடிகர்

அந்த பெண்ணை தோழி என்று கூறி வந்த நடிகர் தற்போது ஃபீலிங் இருப்பதாக பேசுகிறார். அந்த பிரபலமும் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நடிகரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

முத்தம்

முத்தம்

அந்த பெண் பிரபலம் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ இது தான் நட்பா, நண்பர்கள் இப்படித் தான் டைட்டாக கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பெண்ணுக்காகவா உங்களை காதலித்து திருமணம் செய்த மனைவியை பிரிந்தீர்கள், தப்பு செய்துவிட்டீர்கள் அண்ணா என்று ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அறிவுரை

அறிவுரை

நடிகர் மனைவியை பிரிவதாக அறிவித்தபோதே அவர் இந்த பெண்ணை தான் அடுத்து மறுமணம் செய்வார் என்று பேச்சு கிளம்பியது. தற்போது நடப்பதை எல்லாம் பார்த்தால் அது உண்மையாகிவிடும் போன்று உள்ளது என்கிறார்கள் நெட்டிசன்கள். அண்ணா, இந்த பெண் உங்களுக்கு சரிபட்டு வரமாட்டார், மனைவியுடன் மீண்டும் சேர்ந்துவிடுங்கள் என்று சில ரசிகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

எப்படி

எப்படி

காதல் விஷயத்தில் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை நடிகர். தன் மனம் என்ன சொல்கிறதோ அதன்படி தான் நடப்பாராம். அவரின் நட்பு வட்டாரமும் அந்த பெண் பிரபலத்துடன் நட்பாக பழகி வருகிறது. பொதுவான நண்பர்கள் மூலம் சந்தித்து தான் காதலை வளர்த்தார்களாம். இவர்களுக்கு எப்படி பொதுவான நண்பர்கள் இருக்க முடியும் என்று தான் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பெண் பிரபலம் மீது காதல் வந்த பிறகே நடிகர் தனது மனைவியை பிரிந்ததாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X