மகனுக்கு கெட்டப் பெயரை உருவாக்கிட்டோமே.. மன வருத்தத்தில் அப்பா.. அந்த முடிவை எடுக்கப் போறாரா?
ஹைதராபாத்: உலகளவில் மகனுக்கு அப்படியொரு புகழ் கிடைத்த நிலையில், அவரது அப்பாவின் சுயநலத்துக்காக பண்ண அந்த விஷயத்தால் பெரியளவில் பெயரும் பணமும் இழக்க நேரிட்டு விட்டதே என பிரபல நடிகர் தனது மகனுக்காக ரொம்பவே வருந்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரம்மாண்ட இயக்குநர்களின் படங்களில் நடித்து வரும் அந்த கடவுள் பெயர் கொண்ட நடிகருக்கு தன்னால் மிகப்பெரிய தோல்வி உருவாகி விட்டதே என ரொம்பவே ஃபீல் செய்திருக்கிறாராம் அந்த முன்னணி நடிகர்.
அதன் காரணமாக நடிகர் எடுத்துள்ள முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

டாப்பில் தம்பி
தம்பி இன்னமும் நடித்து ஹிட் கொடுத்து வருவதை போலவே நாமும் நடித்து பிளாக்பஸ்டர் கொடுக்கலாம் என பல கோடிகளை கொட்டி பிரபல இயக்குநரை வைத்து உருவாக்கிய படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு முழுக் காரணமும் நடிகர் தான் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

உலகப் புகழ் அடைந்த மகன்
தம்பி ஒரு பக்கம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து வரும் நிலையில், மகன் உலகளவில் தனது நடிப்பால் மிகப்பெரிய புகழையும் வசூலையும் வாரிக் குவித்து உள்ளார். இந்தியாவுக்கே பெருமைத் தேடி தரும் அளவுக்கு அவரது படம் வெளியானதை பார்த்து உலகின் பல நாடுகளில் இருந்து இயக்குநர்கள் எல்லாம் இப்படியொரு படத்தை ஹாலிவுட்டிலேயே எடுக்க முடியாது என வியந்து பாராட்டி வருகின்றனர்.

அப்பாவுக்காக
ஆனால், அப்பா கேட்டுக் கொண்டார் என்பதற்காக எந்தவொரு மறுப்பும் சொல்லாமல் பல கோடி போனாலும் பரவாயில்லை என அவரை ஹீரோவாக்கி தனது உயிரையும் கொடுத்து மகன் நடித்த அந்த படம் வெளியாகி அவருக்கு கிடைத்த பெயரில் பாதியை காலி செய்து விட்டது தான் தற்போது அந்த அப்பா நடிகரை விரக்தியில் தள்ளி உள்ளதாம்.

திடீர் முடிவு
தொடர்ந்து அதிக செலவு செய்து எடுக்கும் தனது படங்கள் தோல்வியை சந்தித்து வர தான் தான் காரணம் என்பதை ரொம்பவே லேட்டாகத்தான் உணர்ந்துள்ளாராம் அந்த நடிகர். மேலும், டாப் நடிகரின் ரீமேக் படத்தை தங்கள் மொழியில் எடுக்கலாம் என நினைத்து ஆரம்பித்த அந்த படத்தை தற்போது இனிமேல் காசு வேஸ்ட் பண்ண வேண்டாம் என நிறுத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிக்கப் போவதில்லை
மேலும், கையில் இருக்கும் ஒரு சில படங்களை மட்டும் முடித்து விட்டு, அதற்கு மேல் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என்றும், முக்கியமான கேரக்டர் ரோலில் நல்ல கதையுடன் மற்ற தயாரிப்பாளர்கள் அணுகினால் வருமானம் வந்தால் மட்டுமே பண்ணலாம் என்கிற முடிவுக்கே அந்த நடிகர் வந்து விட்டதாகவும், இதற்கு மேல் மகனுக்கு தொல்லைக் கொடுக்க வேண்டாம் என்றும் உறுதியான முடிவுக்கு அவர் வந்து விட்டதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











