பெண் நடன இயக்குநர் தான் மீடியேட்டரே.. ரகசிய திருமணம்.. பெண் அரசியல் புள்ளியால் கப்சிப்பான நடிகை!
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் எந்த பெரிய ஹீரோகளில் படம் வந்தாலும் அந்த படத்தில் இந்த பெண் பிரபல நடன இயக்குநரின் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஹீரோக்களுக்கு ஏற்றபடி நடிகைகளிடம் பேசி சமாதானப்படுத்துவது முதல், படப்பிடிப்பு ஸ்பாட்டில் எல்லாரையும் ஒரே குழுவாக வைத்திருப்பது வரை இவர் செட்டில் செய்துவிடுவாராம். அதனால்தான் பல நடிகர்களுக்கும், நடிகைகளுடன் இன்றும் இவருடன் நெருக்கமான நட்பு தொடர்கிறது.
மீடியேட்டர்: அப்படிப்பட்ட இந்த பெண் நடன இயக்குநரின் வீட்டில்தான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரகசிய திருமணம் நடந்ததாக சினிமா பிரபலம் ஒருவர் பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார். அதாவது, மூன்று எழுத்து கொண்ட அந்த நடிகை, பிரபல வாரிசு நடிகருடன் இணைந்து நடித்த போது காதலில் விழுந்தாராம். ஆனால், அந்த வாரிசு நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் தெரிந்திருந்தும் காதல் தீவிரமானதாம். குடும்பத்துக்கு தெரியாமல் இருவரும் நெருக்கமாக பழகிய நிலையில், இந்த காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதே அந்த பெண் நடன இயக்குநராம்.

ரகசிய திருமணம்: தனது வீட்டிலேயே யாருக்கும் தெரியாமல் இருவருக்கும் ரகசியமாக திருமணம் செய்து வைத்தாராம். அதன் பிறகு ஷூட்டிங் என்று வீட்டில் சொல்லிவிட்டு, ஒரே வீட்டில் இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளார்கள். ஆனால் இந்த விஷயம் அந்த வாரிசு நடிகரின் குடும்பத்திற்கு தெரிய வர, குறிப்பாக பெரிய நடிகர் இந்த விஷயம் வெளியில் தெரியவந்தால், என் குடும்ப மானமே போய்விடும் என கதறி அழுதபடி ஒரு முக்கிய பெண் அரசியல் புள்ளியிடம் உதவி சென்றார்.
ஆப்புவைத்த அரசியல் புள்ளி: அதன் பின்னர் அந்த பெண் அரசியல் பிரபலம், மூன்று எழுத்து நடிகையை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தாராம். சினிமாவிற்கு எதுக்கு வந்தியோ அந்த வேலையை மட்டும் பாரு, ஒழுங்காக விலகி விடு... இல்லையென்றால் பிரச்சனை பெரிதாகும் என மிரட்டி இருக்கிறார். இதனால், வேறு வழியில்லாமல் அந்த மூன்று எழுத்து நடிகை வாரிசு நடிகரை விட்டு பிரிந்து விட்டார். இந்த செய்தி அந்த காலத்தில் பத்திரிக்கையில் கூட அப்பட்டமாக வந்தது. இதற்குப் பிறகு அந்த நடிகை சினிமாவில் டாப் ஹீரோயினாக உயர்ந்ததுடன், பல முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து கிசுகிசுக்களில் சிக்கியதாகவும், தற்போது அந்த நடிகை கணவர், குழந்தை என செட்டிலாகிவிட்டார் என அந்த சினிமா பிரபலம் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications