அந்த லேடி டைரக்டரும் சரியான கேடியாம்.. ஒவ்வொரு கதையையும் திருடியும் மிரட்டியும் தான் பண்றாங்களாம்?
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் பஞ்சாயத்து தற்போது அதிகரித்து வருகிறது. பிரதர் நடிகரின் சொந்தக்கார தயாரிப்பாளருக்கும் அ எழுத்து இயக்குநருக்கும் சண்டை முற்றி வரும் நிலையில், இரு தரப்பில் இருந்தும் ஆட்கள் இறங்கி மாற்றி மாற்றி புகார் கூறி வருகின்றனர்.
முன்னணி நடிகர்கள் படங்களை இயக்கும் அத்தனை இயக்குநர்கள் மீதும் தொடர்ந்து காப்பி சர்ச்சை பிரச்சனைகளும், கதை திருட்டு பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.

இதில், பெரும்பாலும் லேடி இயக்குநர்கள் சிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த பிரபல லேடி டைரக்டரும் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளதாக கூறுகின்றனர்.
எல்லாமே ஃபிராடு: சொந்தமாக திரைக்கதை எழுதி தமிழ் சினிமாவில் படங்கள் இயக்குபவர்கள் வெகு சிலர் மட்டும் தான் என்றும் அவர்களுக்கு பெரும்பாலும் பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்புகளே கிடைப்பதில்லை என்றும் நன்றாக இயக்கத் தெரிந்தவர்கள் மற்றவர்களிடம் கதைகளை திருடியும், மிரட்டி வாங்கியும் ஏமாற்றியும் தான் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர்கள் என மார் தட்டி வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
ஏகப்பட்ட பஞ்சாயத்து: ஒரு பக்கம் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை, இன்னொரு பக்கம், கட்டப்பஞ்சாயத்து பிரச்சனை, இன்னொரு பக்கம் கடன் பிரச்சனை என கோலிவுட்டே ஒரே பஞ்சாயத்து மையமாக இருக்கிறது. நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கம் என எதுவுமே முறையாக இயங்காத நிலை இருப்பதாகவும், அதில் உள்ளவர்கள் மீதே பஞ்சாயத்து இருப்பதால் யாரும் எந்தவொரு பஞ்சாயத்தையும் சரி செய்வது இல்லை என்கின்றனர்.
லேடி இயக்குநரும் கேடி: படங்களில் எல்லாம் கருத்து சொல்லி படத்தை எடுத்து வரும் அந்த லேடி இயக்குநரும் சரியான கேடி என்றும் முதல் படத்தின் கதையே ஒரு சாதாரண வீராங்கனையின் கதையை திருடித்தான் எடுத்தார் என்றும் புகையத் தொடங்கி உள்ளன. சினிமாவில் சாமானியர்களுக்கு நீதி கிடைக்கவே கிடைக்காது என்றும் அந்த லேடி இயக்குநர் மிரட்டி எல்லாம் கதையை வாங்கியதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளன. அவர் அடுத்து செய்யப் போகும் கதையும் திருட்டுக் கதை தான் என்றும் பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications