ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்னு சொல்வாங்க.. ஆனா அந்த நடிகரை நம்பி இத்தனை கோடியா..?

By Staff

சென்னை: சோலோவா ஹிட் கொடுக்க முடியாமல் க்ருப்ல டூப்னு நடிச்சிட்டு வரும் அந்த நடிகரை நம்பி பல நூறு கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப் போவதாக இயக்குநர் ஒருவர் அடம் பிடிப்பது தான் கோலிவுட்டையே தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது என்கின்றனர்.

ராஜா வேஷத்துக்கு நச்சென அந்த நடிகர் பொருந்தினாலும், போட்ட காசை தனியாளாக மீட்க அந்த நடிகருக்கு அவ்வளவு பெரிய மார்க்கெட் இல்லையே? ஏன் வீணாக ரிஸ்க் எடுக்கிறீங்கன்னு சில சினிமா பிரபலங்களே கேட்டால், ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி என செம நக்கலாக அந்த டீம் இப்போதைக்கு ஓவர் பந்தா காட்டி வருகிறது என்கின்றனர்.

Few 100 crores will ready to spoil for believing a single actor shocks Kollywood

தலைகீழாகத்தான் குதிப்பேன் என அந்த படத்தின் தயாரிப்பாளரும் பல நூறு கோடிகளை கொட்டி அந்த நடிகரை வைத்து படம் எடுக்க முடிவு செய்து விட்டாராம்.

காற்றுள்ள போதே: இளிச்சவாயன்கள் நம்பளை நம்பி ஒரு குரூப்பா கிளம்பி வந்திருக்காங்க என்பதை அறிந்து கொண்ட நடிகரும் அவர்களுக்கு நல்லது சொல்லி நானெல்லாம் அதற்கு ஒர்த் இல்லை பாஸ் என உண்மையை சொல்லாமல், காற்றுள்ள போதே தூற்றிக் கொள், கிடைக்கிற கேப்பில் டைனோசரஸையே வெட்டி விருந்தாக்கு என்பது போல தனது சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி அந்த படத்தை நானே பண்றேன் என ஓகே சொல்லி விட்டாராம்.

அலர்ட் பண்ணியும் அடங்கமாட்றானே: சில பிரபலங்களே அந்த நடிகரை வைத்து இத்தனை பெரிய பிரம்மாண்ட படத்தை பண்ண வேண்டாம் என இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அலர்ட் பண்ணியும் அடங்காமல் நாங்க பாகுபலி படைக்கப் போகிறோம், 1000 கோடி வசூல் ஈட்டும் என வடை சுட ஆரம்பித்து விட்டனராம்.

இதற்கு மேல், உங்களை அந்த படைச்சவனாலையும் காப்பாத்த முடியாது என நல்லது சொன்ன சில சினிமா பிரபலங்களும், வாயை மூடிக் கொண்டு நடக்கப் போகிற வேடிக்கையை மட்டும் பார்க்கும் முடிவில் தயாராக இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

சினிமாவில் வெற்றி, தோல்வி சகஜம் தான். ஆனால், தோல்வியாகும் என தெரிந்தே கோடிகளை வீணடிப்பது என்னவொரு டிசைன் என்றே தெரியவில்லை. ஆற்றில் போட்டாலும் அளந்து போடச் சொல்லிக் கொடுத்த ஊரில் இப்படி அநியாயம் பண்றாங்களே என பெரும் புலம்பல் தற்போது கோலிவுட்டில் காதை கிழிக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X