லேஸா டிரிக்கர் பண்ணாலே போதும்.. மாஸ் நடிகரை அவங்களே காலி பண்ணிடுவாங்க.. மாஸ்டர் பிளான்?

By Staff

சென்னை: சோஷியல் மீடியாவில் மாஸ் நடிகர் ரசிகர்கள் எல்லை மீறி சண்டை போட வைத்து விட்டாலே போதும் அந்த நடிகரின் அரசியல் கனவு தூள் தூளாக தகர்ந்து விடும் என அரசியல் கட்சியினர் சிலர் அதிரடியாக திட்டமிட்டு டிரிக்கர் பண்ணும் வேலைகளில் இறங்கி இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகரின் அரசியல் என்ட்ரி இத்தனை ஆண்டுகள் அவருக்கு முன்னதாக சீட் போட்டு முட்டி மோதிக் கொண்டிருக்கும் பல கட்சிகளுக்கு மரண பயத்தை காட்டி இருக்கிறது. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படவே வேண்டாம் என்றும் எளிதில் ஆரம்பிக்கும் முன்பே முளையிலே கிள்ளி எறிந்து விடலாம் என ஷார்ட் ரூட்டை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாக கூறுகின்றனர்.

Few Politicians plans to create social media war against Mass actor?


மாஸ் நடிகரின் பக்கா பிளான்: அந்த பெரிய இடத்து பிள்ளையா? நாமா? என்கிற நிலை வந்தால் மக்கள் நம் பக்கம் நிற்பார்களே என்கிற பக்காவான பிளான் உடன் தான் அரசியல் கட்சியை பல ஆலோசனைகளுக்குப் பிறகு ஆரம்பித்திருக்கிறார் மாஸ் நடிகர். மற்ற கட்சிகள் எல்லாமே பலவீனமாக உள்ள நிலையில், போட்டியிட்டு எதிர்க்கட்சியாக வந்தால் கூட வெற்றி தான் என்றும் வெற்றியே கிடைத்து விட்டால் அதை விட பெரிய ஜாக்பாட் இல்லை என்கிற முடிவுடன் தான் நடிகர் இந்த முடிவை நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறாரம்.

சிறு கட்சிகள் அப்செட்: பெரிய கட்சிகளை விட நடிகரின் வரவு சிறிய கட்சிகளை தான் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறதாம். அதிலும், அந்த தேசிய கட்சி எப்படியாவது இங்கே ஷைன் ஆகிட வேண்டும் என முயற்சித்து வரும் நிலையில், அதற்கு பெரிய முட்டுக்கட்டையாக நடிகரின் அறிவிப்பு வந்த நிலையில், ரொம்பவே கடுப்பாகி இருப்பதாகவும் முதல் அறிவிப்பிலேயே தங்களுக்கு எதிரான விஷயங்கள் இருப்பதை நோட் பண்ணிய நிலையில், அட்டாக் மோடிற்கு சென்று இருப்பதாக கூறுகின்றனர்.

ட்ரிக்கர் பண்ணா போதும்: சீனியர் நடிகருடன் நடிகரை கம்பேர் செய்து விட்டாலே ரசிகர்கள் ட்ரிகராகி பஞ்சாயத்தை பெரிதாக்கி விடுவார்கள். அரசியல் ஆட்டத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்னதாக 2 ஆண்டுகளில் பலத்த அடி கொடுத்து அவரது கனவையே காலி செய்துவிட அவரது ரசிகர்களை ட்ரிக்கர் பண்ணா போதும் என சோஷியல் மீடியாவில் ஐடி விங்கை களமிறக்கி சர்ச்சைகளையும் சண்டைகளையும் அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

வேற ரகம்: ஆனால், அதெல்லாம் தெரிந்து கொண்டு தான் உள்ளே நுழைந்திருக்கிறார் என்றும் தனது ரசிகர்களை எந்தளவுக்கு கன்ட்ரோல் பண்ணனும் எப்போ எந்த அளவுக்கு வரம்பு மீறி மற்ற கட்சிகளை ட்ரோல் பண்ணனும் என எல்லா விஷயங்களையும் ரெடி செய்து விட்டுத்தான் வந்திருக்கிறார் என்றும் கூறுகின்றனர். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என பார்க்க ரசிகர்களும் மக்களும் ஆவலாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X