ஆத்துல ஒரு கால்.. சேத்துல ஒரு கால்.. வெரைட்டி நடிகர் மீது கடுங்கோபத்தில் தயாரிப்பாளர்கள்!
சென்னை: ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பது போல ஏகப்பட்ட படங்களில் கமீட் ஆகி விட்டு பயங்கரமாக கால்ஷீட் பிரச்சனை செய்து வருவதாக அந்த வெரைட்டி நடிகர் மீது தயாரிப்பாளர்கள் பலர் பயங்கர கோபத்தில் உள்ளனர்.
முடித்துக் கொடுக்க வேண்டிய பல படங்களை அப்படியே அம்போ என விட்டு விட்டு அடுத்த அடுத்த படங்களுக்கும் நிகழ்ச்சிக்கும் தாவி வருவதால் ஏகப்பட்ட பிரச்சனைகள் கிளம்பி உள்ளன.
எந்த ஷூட்டிங்கிற்கு தான் சொன்ன நேரத்திற்கு வருவீங்க என்றும், என் படம் கடைசி கட்டத்தில் இருக்கு கருணை காட்டுங்க என்றும் தயாரிப்பாளர்கள் அழுகாத குறையாக கெஞ்சும் அளவுக்கு அப்படியொரு அலம்பல் செய்து வருகிறாராம் அந்த வெரைட்டி நடிகர்.

குவியும் வாய்ப்புகள்
கோலிவுட்டில் வெரைட்டி காட்டி நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்து விட்ட அந்த பிரபல நடிகருக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறதாம். இங்கேயே வருஷத்துக்கு அரை டஜன் படங்களில் நடிக்கக் கூடியவருக்கு மற்ற மொழிகளில் இருந்து வரும் ஆபர்களை சும்மாவா விடுவார்.

எல்லாருக்கும் ஓகே
கால்ஷீட் கேட்பவர்கள் எல்லாருக்கும் உடனடியாக ஓகே சொல்லி அட்வான்ஸை வாங்கிக் கொண்டு அடுத்த படத்திற்கான அட்வான்ஸை வாங்க கிளம்பி விடுகிறாராம். முதலில் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் இவரது வரவுக்காக நெடு நாட்களாக காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எகிறிய சம்பளம்
முன்னணி ஹீரோக்களுக்கு எதிரியாக நடித்தே தனது சம்பளத்தை எகிற வைத்து விட்டார் அந்த வெரைட்டி நடிகர். இவரை ஹீரோவாக நடிக்க வைத்த இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் கால்ஷீட் பிரச்சனையை காரணம் காட்டி அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கம்பி நீட்டுகிறார்
சில படங்களில் ஒப்புக் கொண்ட இவர், சரியாக ஷூட்டிங்கிற்கு வர முடியாமல் போக இயக்குநர்கள் இவரை ஓரங்கட்டி விட்டு வேறு ஒரு நபரை தேடி பிடிக்கத் தொடங்கி விடுகின்றனர். சில படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டு, சம்பளம் போதுமானதாக இல்லாமல் போனால் இவரே கம்பியையும் நீட்டி எஸ்கேப் ஆகி விடுகிறார்.

டிவி நிகழ்ச்சி
ஏற்கனவே டிவி நிகழ்ச்சியில் சில வாரங்கள் கலந்து கொண்ட வெரைட்டி நடிகர், மேலும் ஒரு புதிய ஷோவில் கலந்து கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போல பல தயாரிப்பாளர்களுக்கும் மாறி இருக்கிறது. நம்ம படத்தின் ஷூட்டிங்கை முடித்துக் கொடுக்காமல் இப்படி ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைத்து வருகிறாரே என புலம்பி வருகிறார்களாம் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











