முதல் படமே ஃபிளாப்.. இனிமே அந்த ரியாலிட்டி ஷோ நடிகை வேணாம் என ஒதுக்குறாங்களாம் தயாரிப்பாளர்கள்!
சென்னை: ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த பிரபலத்தை அடுத்து தொடர்ந்து பல படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கிய அந்த அறிமுக நடிகையின் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
கோலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் படமே படு தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கல் உருவாகி உள்ளதாம்.
சில தயாரிப்பாளர்கள் அந்த நடிகையா வேண்டவே வேண்டாம் என ஒரேயடியாக மறுத்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

காதல் டிராமா
அந்த ரியாலிட்டி ஷோ வீட்டுக்குள் சக நடிகரை காதலிப்பது போல அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம் நிகழ்ச்சிக்காக நடத்திய டிராமாவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். ஆனால், வெளியே வந்ததும் இருவரும் வழக்கம் போல நண்பர்கள் என பிரிந்து விட்டனர்.

வரிசையாக படங்கள்
ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த புகழை பயன்படுத்தி பல படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி சொந்த வீடெல்லாம் வாங்கி விட்டார் அந்த ரியாலிட்டி ஷோ பிரபலம். வரிசையாக படங்கள் உள்ள நிலையில், இனிமே கோலிவுட்டையே நாம தான் கட்டி ஆள போகிறோம் என கனவு கண்ட நிலையில் எல்லாமே தற்போது காணல் நீராக மாறிவிட்டது.

படம் ஃபிளாப்
பெரிதும் எதிர்பார்த்த முதல் படம் அவருக்கு கை கொடுக்காமல் மிகப்பெரிய ஃபிளாப் படமாக அமைந்து விட்டது. ஏற்கனவே அவர் நடிப்பில் உருவாகி உள்ள சில படங்களை தவிர புதிதாக எந்தவொரு படமும் அவருக்கு இனி கிடைக்காது என்கிற நிலை உருவாகி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கடும் போட்டி
அவரை போலவே அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சில இளம் நடிகைகள் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இனி அவரை புக் பண்ண வேண்டாம் என்றும் புது வரவுகளுக்கு அதிக மவுசு இருப்பதாக தயாரிப்பாளர்கள் ஒதுக்கி வருகின்றனர்.

டிராமா காதலருடன்
அந்த நடிகையுடன் காதல் டிராமாவில் ஈடுபட்டு வந்த அந்த நடிகருக்கு அடுத்தடுத்து படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில், மீண்டும் இருவரையும் ஜோடியாக போட்டு ஒரு படத்தை எடுத்தால் படம் நிச்சயம் செம ஹிட்டாகும் என நினைத்து இயக்குநர் சொல்ல தயாரிப்பாளரோ அது தேவை இல்லாத ஆணி வேறு நபரை போட்டு படம் எடுங்கன்னு சைலன்ட்டாக சொல்லிட்டாராம்.

கோடம்பாக்கத்தில் லீக்
அதனால், அந்த அறிமுக நடிகையின் அடுத்த பட வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டதாம். இந்த செய்தி கோடம்பாக்கத்தில் தீயாய் பரவ மேலும், சில தயாரிப்பாளர்களும் அந்த நடிகையை வேண்டாம் என விலக்கி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. யாருக்கு எப்போ மார்க்கெட் எகிறும் எப்போ சறுக்கும் என்றே சொல்ல முடியவில்லையே என நடிகை புலம்ப ஆரம்பித்துள்ளாராம். கைவசம் இருக்கும் படங்களில் ஏதாவது ஒன்று கை கொடுத்தால் தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமாம்.


Click it and Unblock the Notifications











