அந்த நடிகையா வேண்டவே வேண்டாம்.. பாட்டு நடிகைக்கு அப்படியொரு முத்திரை குத்தி ஓரங்கட்டிட்டாங்களாம்!
சென்னை: கோலிவுட்டில் பாட்டு நடிகையை அதிர்ஷ்டம் இல்லாத நடிகை என்றே முத்திரை குத்தி ஓரங்கட்டி இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னணி நடிகர்கள் படத்தில் வாய்ப்புகள் வந்து குவிந்த நிலையில், அந்த படங்கள் சரிவர ஓடாத காரணத்தால் தற்போது யாருமே கோலிவுட்டில் அவரை சீண்டுவதில்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
நல்ல நடிகை என்று பெயர் எடுத்தாலும், அதிர்ஷ்டம் மேட்டரில் சிக்கிக் கொண்ட நடிகைக்கு இப்படி வாய்ப்புகள் வராமல் போயிடுச்சேன்னு கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

கெட்டப் பழக்கம்
கோலிவுட் தயாரிப்பாளர்கள் பலரிடம் உள்ள ஒரே கெட்டப் பழக்கம் என்னவென்றால், நடிகர்கள் படங்கள் எத்தனை முறை ஃபிளாப் ஆனாலும் அவர்களின் அதிர்ஷ்டம் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஆனால், நடிகைகள் விஷயத்தில் கதையே வேறு, தொடர்ந்து ரெண்டு படம் பிக்கப் ஆகவில்லை என்றாலும், அடுத்து அவரை எந்தவொரு தயாரிப்பாளரும் புக் பண்ணவே மாட்டார்கள்.

முத்திரை குத்திடுவாங்க
ரெட் கார்டு, பிளாக் மார்க் போல ராசியில்லாத நடிகைன்னு முத்திரை குத்திட்டாங்கன்னா மறுபடியும் சினிமாவில் அந்த நடிகை பெரிய அளவில் சாதிக்கவே முடியாதபடி ஆகிவிடும். ஏகப்பட்ட நடிகைகள் பிற மாநிலங்களிலேயே செட்டில் ஆக இதுதான் முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.

நல்ல வரவேற்பு
காதல் சப்ஜெக்ட் படத்தில் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு காரணமாக அந்த பாட்டு நடிகைக்கு கோடம்பாக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இளைஞர்கள் அவரது அழகில் சொக்கி விழுகின்றனர் என அடுத்தடுத்து படங்களாக புக் ஆகின. ஆனால், தற்போது நிலைமையே வேற மாறி ஆகிவிட்டது.

எல்லாமே ஃபிளாப்
அந்த நடிகை நடிப்பில் வெளிவந்த ஒரு சில படங்களை தவிர்த்து அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் திரைக்கதை சரியில்லை ரிலீஸ் தாமதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தோல்வியை தழுவிய நிலையில், ஒட்டுமொத்த பழியையும் தூக்கி அந்த நடிகையின் ராசி தான் என அவரை அப்படியே ஓரங்கட்டி விட்டனராம்.

பக்கத்து மாநிலத்தில்
அறிமுகமான மாநிலத்திலும் எந்தவொரு படங்களும் அம்மணிக்கு கிடைக்கவில்லை. கோடம்பாக்கத்திலும் டோட்டலாக ஓரங்கட்டப்பட்டுள்ள நிலையில், பக்கத்து மாநிலத்தில் மட்டுமே ஒரு சில படங்களில் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. அதுவும் பெரிய நடிகர்கள் படங்கள் இல்லாமல் இளம் நடிகர்களின் படங்கள் மட்டுமே வருகின்றனவாம்.

சரிந்த மார்க்கெட்
இவருக்கு முன்பாக திரைத் துறைக்கு வந்த பல முன்னாள் நடிகைகளின் மார்க்கெட் இன்னமும் உச்சத்தில் இருக்க பல டாப் ஹீரோக்களுடனும் அவர்கள் ஜோடி போட்டு நடித்து வருகின்றனர். ஆனால், இவரது மார்க்கெட் தான் கடகடவென சரிந்து அதள பாதாளாத்திற்கு சென்றுள்ளதாம்.

மாற்றும் முயற்சி
நல்லா நடிக்க தெரியாத பல நடிகைகளே மார்க்கெட்டை உயர்த்தி வரும் நிலையில், தனக்கு என்ன குறை என நினைத்த நடிகை அத்தனையும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். நடிகைகள் தங்களின் நடிப்புத் திறமையை நிரூபிக்க உமன் சென்ட்ரிக் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நிலையில், இந்த பாட்டு நடிகையும் அதே ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











