அம்மாவுக்கே டிமிக்கி கொடுத்துட்டு நடிகை செஞ்ச காரியம்.. இப்போ குத்துதே குடையுதேன்னு புலம்பல்!
சென்னை: டிவி சீரியல் நடிகை சினிமா ஆசை காரணமாக அந்த காமெடி நடிகருடன் இணைந்து ஒன்றுக்கும் உதவாத ஒரு படத்தில் நடித்தார். அதுவரை நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைத்த நிலையில், அந்த படத்திற்கு பிறகு நடிகைக்கு சுத்தமாக பட வாய்ப்புகளே கிடைக்காமல் நின்று விட்டது. இதனால் நடிகையின் அம்மா பயங்கர கோபத்தில் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
வயதான காமெடி நடிகருடன் நடிக்க வேண்டாம் என கிளி பிள்ளைக்கு சொல்வது போல அந்த நடிகையின் அம்மா பலமுறை சொல்லியும் அதிக சம்பளம் கிடைப்பதால் அம்மாவுக்கே டிமிக்கி கொடுத்து விட்டு அந்த படத்தில் நடிக்க நடிகை ஒப்புக் கொண்டாராம்.

நடிகை மீது கைவைத்தாரா நடிகர்?: ஏற்கனவே பல பெண்களுடன் படுக்கையறை விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்த அந்த நடிகர் இளம் நடிகையையும் விடவில்லை என திடுக்கிட வைக்கின்றனர். இந்த விவகாரம் உண்மையா? அல்லது பொய்யா? என தெரியவில்லை. ஆனால், இப்படியொரு சர்ச்சை வெடித்த நிலையில் தான் தற்போது அந்த நடிகைக்கு புதிய பட வாய்ப்புகளே கிடைக்காமல் போக காரணம் என்கின்றனர்.
அப்செட்டில் நடிகை: அம்மாவின் பேச்சைக் கேட்காமல் அந்த நடிகருடன் ஜோடி போட்டு நடித்தது தப்பு என தற்போது உணர்ந்த நடிகை புதிய பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் ரொம்பவே அப்செட்டாக இருக்கிறாராம். நடிகருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை சமீபத்தில் தான் நடிகையின் அம்மா பார்த்து விட நடிகையுடன் பேசவே இல்லையாம்.
வீட்டு பக்கம் வந்துடாதே: அதை விட மோசமாக நடிகையை இனிமேல் வீட்டுப் பக்கமே வந்து விடாதே என அம்மா விரட்டி அடித்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சில வாரங்களாகவே ஹோட்டல் ரூமிலேயே நடிகை தங்கி வருவதாகவும் சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலுமே தொடர்பில்லாமல் நடிகை இருந்து வருவதால் ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்றும் நடிகையை சமாதானம் செய்ய வேண்டும் என நடிகையின் மேனேஜர் அம்மாவிடம் கோரிக்கை வைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.
என்ன ஆகப்போகுதோ?: மகளுக்காக அம்மா இறங்கி வருவாரா? அல்லது பிடிவாதமாகவே இருந்து விடுவாரா என ஒரே பரபரப்பு சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. சீரியல் நடிகையாக இருந்தது வரை எந்தவொரு பிரச்சனையும் இல்லை என்றும் நடிகையாக மாறிய நிலையில், பல சிக்கல்களை சந்தித்து வருகிறாரே என அவருக்கு நெருக்கமானவர்களே பேசத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications











