மீண்டும் பப்ளிக்காக முட்டிக்கொள்ளும் நடிகர்கள்... வீதிக்கு வந்த விவகாரம்!
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் இருவருக்குள் மீண்டும் மோதல் உருவாகியுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களாக வலம் இரண்டு நடிகர்களுக்குள் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது.
இளமை துள்ள சினிமாவுக்குள் வந்த அந்த ஒல்லி நடிகர், படிப்படியாக முன்னேறி பெரிய இடத்து மாப்பிள்ளை ஆனார். அவருக்கும் விரல் நடிகருக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்.
ஆனால் சமீபத்தில் இருவரும் இணைந்து பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினர். தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என சத்தியம் செய்யாத குறையாக கூறி வந்தனர். இதனை அவர்களது ரசிகர்களும் நம்பினர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெரிய இடத்து மாப்பிள்ளை, சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவரின் பட்டத்தை யாராலும் பெற முடியாது என கருத்து தெரிவித்தார்.
அவரது இந்த கருத்து விரல் நடிகருக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் போல. உடனே தனது கருத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட விரல் நடிகர், அந்த பட்டத்தை அடையே வேணடும் என தான் ஒருபோதும் நினைத்ததில்லை எனக் கூறியுள்ளார்.
இதனால் தங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என அவர்கள் சொன்னது பொய் தானோ என ரசிகர்கள் பேச தொடங்கி இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











