நானும் இப்போ ஹீரோ தான்.. மல்லுக்கு நின்ற காமெடி நடிகர்.. கைவிடப்பட்ட விரல் நடிகரின் படம்!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே விரல் நடிகருக்கு நேரம் சரியில்லாமல் இருந்தது. ஆனால், அந்த நடிகரின் விடாத முயற்சியால் அடுத்தடுத்து மூன்று வெற்றிப்படத்தை கொடுத்து, மீண்டும் ஃபாமுக்கு வந்தார். ஆனால், அண்மையில் பெரிய இயக்குநர் ஒருவரின் படத்தில் நடித்து மீண்டும் பெயரை கெடுத்துக்கொண்டார். அந்த படத்தை பார்த்தவர்கள் எல்லாம், விரல் நடிகரை திட்டாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். இதெல்லாம் ஒரு படமா, இதுல எப்படி நடிச்சீங்க... கதையை கேட்காமல் நடிச்சீங்களா... என கேட்டு வருகின்றனர்.
பெரிய இயக்குநரின் படம் என்பதால், நிச்சயம் பெயர் கிடைக்கும் என, வந்த பல நல்ல வாய்ப்புகளை எல்லாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு இந்த படத்தில் நடித்தார் விரல் நடிகர். ஆனால், படம் ஊத்திக்கொண்டதால், கடுப்பான நடிகர் கோவத்தில் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். யார் ஃபோன் போட்டாலும், அதை தவிர்த்து வருகிறார். இப்படி இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் சென்று கொண்டு இருக்க, விரல் நடிகரின் பிறந்த நாளில், ஒரு படத்தின் அறிவிப்பு வெளியானது. அந்த படத்தை வளர்ந்து வரும் ஒரு இளம் இயக்குநர் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தில், விரல் நடிகரால் வளர்ந்து தற்போது ஹீரோவாக மாறி இருக்கும் நடிகர். இந்த படத்தில் காமெடி ரோலில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

கைவிடப்பட்ட படம்: ஆனால், காமெடியன் டூ ஹீரோவான அந்த நடிகர், நானும் இப்போ ஹீரோ தான், எனக்கும் ஹீரோவிற்கு ஈக்குவலாக காட்சி இருக்க வேண்டும் என்றும், அந்த காட்சியை அப்படி மாத்து, இந்த காட்சியை இப்படி மாத்து என சொல்லி இருக்கிறார். இதனால், விரல் நடிகருக்கும் காமெடி நடிகருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் அண்மையில் ஒரு பிரச்சனையில் சிக்கி அதன் விசாரணை ஒரு பக்கம் சென்று கொண்டு இருப்பதால், படப்பிடிப்பு இப்போதைக்கு தொடங்க வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு படம் ஆரம்பிக்கும் போதே இத்தனை பிரச்சனையா என கடுப்பான விரல் நடிகர், இந்த படத்தில் இருந்து விலகி, வேறு ஒரு வெற்றிகரமான இயக்குநர் ஒருவரின் படத்தில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. விரல் நடிகருக்காக பல நாட்களாக காத்திருந்த, அந்த இளம் இயக்குநர் அப்செட்டாகி அடுத்து வேறு ஒரு நடிகருக்கு இந்த கதையை சொல்லி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











