twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அன்பு பிடியில் கோலிவுட் மும்பையில் கோலோச்சி வரும் தாதாக்களுக்கு சற்றும் குறைவில்லாமல், அவர்களைவிட படு மோசமான தாதாக்கள் கோலிவுட்டையும் ஆட்டிப் படைத்து வருகிறார்கள்என்பது அஜீத் விவகாரத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் முதலிடத்தில் உள்ள நடிகர்களில்முக்கியமானவர் அஜீத். இப்போது நேரம் சரியில்லாமல் சுணங்கிப் போய்க்கிடக்கிறார்.அவரையே ஒரு தேர்ட் கிளாஸ் குற்றவாளியைப் போல, ஹோட்டல் ரூமில் அடைத்துவைத்து அசிங்கமாகப் பேசியும், திட்டியும், அடிக்க முயன்றும், மிரட்டியும் பாண்ட்பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது கோலிவுட்டைஅதிர வைத்துள்ளது.இந்த சம்பவத்தில் அடிபடும் முக்கியப் புள்ளி தமிழ் சினிமாவின் கரும்புள்ளியாகதிகழ்கிறார் என தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மெளனமாக குமுறுகிறார்கள்.உயிர்த் தோழியின் பினாமியாக கருதப்படும் இந்த அன்பான நபரின்அடாவடித்தனத்திற்கு எல்லையே கிடையாது என்று முகத்தில் பயம் அப்பகூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள் பலர்.தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஆண்டுக்கு 600 படம், 700 படம் என்று தயாரித்துக்குவித்தார்கள். ஆனால் இன்றோ ஆண்டுக்கு 100 நேரடித் தமிழ்ப் படங்கள் வந்தாலேபெரிது என்கிறார்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டால், நிதிப்பற்றாக்குறைதான் முக்கியக் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை முதலாளி என்றுதான் சினிமா உலகில் பயபக்தியோடு அழைப்பார்கள். அந்த அளவுக்கு வெயிட்டாக அப்போது இருந்தார்கள்.ஆனால் இன்றைய தயாரிப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள்?அங்கே, இங்கே கொஞ்சம் பணத்தைப் புரட்டி பட பூஜையைப் போடுகிறார்கள்.மும்பையிலிருந்து ஒரு குத்துப் பாட்டு நாயகி, கிளாமருக்காகவே பிறந்தவர் போலஒரு கலக்கல் நாயகியைப் போட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.கதையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. பூஜை போட்ட பின்னர் நேராக ஒருபைனான்சியரிடம் ஓடுகிறார்கள். அந்த பைனான்சியர் என்ன வட்டி போட்டாலும்கவலைப்படாமல் அவர் காட்டும் இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு கரன்சிநோட்டுக்களை அள்ளிக் கொண்டு வருகிறார்கள்.இப்படித்தான் படத் தயாரிப்பு ஆரம்பமாகிறது. இடையில் ஏதாவது பிரச்சினையால்படம் பாதியில் நின்றாலோ அல்லது படம விற்காமல் போனலோ அல்லது சரியாகஓடாவிட்டாலோ அந்த தயாரிப்பளரின் கதி அதோ கதிதான்.பணம் வாங்கிய பைனான்சியரிடம் அந்த தயாரிப்பாளர் படாத பாடுபடுவார்.கொடுத்த பணத்தை வசூலிக்க சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வது என்பதுடீசண்டான பைனான்சியர்கள் செய்யும் நியாயமான வேலை. இதைச் செய்யும்பைனான்சியர்களை குறை சொல்ல முடியாது. கொடுத்த பணத்தை வாங்கசொத்துக்களை வாங்கிக் கொள்கிறார்கள்.ஆனால், இப்போது பைனான்சியர்கள் என்ற பெயரில் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ள பெரிய ஆட்களின் பினாமிகள், கந்து வட்டிக் கும்பல்கள்,காண்ட்ராக்டர்கள் ஆகியோர் பணம் வாங்கிய தயாரிப்பாளரையே கடத்திச் செல்வது,அடைத்து வைத்து மிரட்டுவது என்பது உள்ளிட்ட அடாவடித்தனங்களை அலட்டிக்கொள்ளாமல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.இவர்களுக்குப் பயந்து எப்பாடு பட்டாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். அது முடியாமல் போகும்போது தற்கொலை முடிவை நாடுகிறார்கள்அல்லது எங்காவது ஓடிப் போய் விடுகிறார்கள்.பைனான்சியரால் பாதிக்கப்பட்டு உருண்ட பெரிய தலை சில ஆண்டுகளுக்கு முன்புதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஜீவி. மிகப் பிரபமலானகுடும்பததைச் சேர்ந்த ஜீவி பல தரமான படங்களைத் தயாரித்தவர். மணிரத்தினத்தின்அண்ணன்.இப்படிப்பட்ட பெருமை இருந்தும், அவரை அந்த பைனான்சியர் படு கேவலமாகநடத்தியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போதுகூறப்பட்டது. அதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல்துறை அப்படியேநின்று விட்டது.இன்று வரை ஜீவியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை போலீஸார் சொல்லவேஇல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை.தமிழ் சினிமா பைனான்சியர்களிலேயே மிகப் பெரும் புள்ளியாக அந்த அன்பானபைனான்சியர் தான் திகழ்கிறார்.அவரது பாக்கெட்டில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை மிகவும் நீளம். அவரதுஅடாவடித்தனங்களுக்கு அளவே இல்லையாம். எத்தகைய மோசமான முறையையும்கையாள இந்த அன்பானவர் தயங்குவதே இல்லை.இவருக்கென்று பெரிய அடியாள் கூட்டம் உண்டு. பணத்தைத் திருப்பித் தராததயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் என யாராக இருந்தாலும் சற்றும்கவலைப்படாமல் தங்களது இருப்பிடத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் துவைத்துஎடுத்து விடுவார்களாம்.இயக்குனரை திருமணம் செய்த அந்த காதல் கோட்டை நாயகி சொந்தமாக தயாரித்தபடத்திற்கு இவரிடம் கடன் வாங்கினார். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால்(வட்டி அந்த அளவுக்கு ஜாஸ்தி!) தேவயானியை தங்களது இருப்பிடத்திற்குத் தூக்கிக்கொண்டு போய் அடைத்து வைத்தனர்.இதேபோல நடிகர் கார்த்திக்கையும் இக்கும்பல் ஒருமுறை கடத்திக் கொண்டு போய்விட்டதாக முன்பு சலசலப்பு எழுந்தது. ஜீவியையும் குடும்பத்தோடு இந்தக் கும்பல்கடத்தியதாகவும் கூறப்பட்டது.இவர்களிடம் சிக்கி ரம்மை நடிகை படாதபாடு பட்டு வருவது உலகுக்கே தெரியும்.இப்படிப்பட்ட கும்பலிடம்தான் இப்போது அஜீத் சிக்கிக் காண்டு விட்டதாககூறுகிறார்கள். இத்தனைக்கும் இவர்களிடம் அஜீத் கை நீட்டி காசு ஏதும்வாங்கவில்லை.அவருக்கு பிரச்சனை பாலா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துடன் தான். ஆனால்,இடையில் படத்தை தேனப்பன் டேக் ஓவர் செய்ய, ஹீரோவை பாலா மாற்றிவிடஅஜீத்துக்கு சிக்கலானது.படத்துக்காக தந்த அட்வான்ஸை திருப்பித் தருவது தொடர்பாக பேசலாம் வாருங்கள்என்று கூறி கூப்பிட்டுவிட்டு ஹோட்டல் ரூமில் அடைத்து வைத்து மிரட்டி, வாடாபோடா என்று பேசி, அடிக்கவும் முயன்று பல வெற்றுப் பத்திரங்களில் அஜீத்திடம்கையெழுத்து வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அந்த மதுரைக்கார பைனான்சியர்அஜீத்தை செய்த அர்ச்சனைகளை அச்சில் ஏற்ற முடியாதாம்.அந்த அளவுக்கு அஜீத்தை அவர் படு மோசமாகப் பேசியுள்ளார் இந்த அன்பர்.இனியாவது தமிழ் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு இதுபோன்ற தாதாக்களின்பிடியிலிருந்து விடுபட்டு, தமிழ் சினிமாவைக் காக்க வேண்டும் என்பதே பலதயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கோரிக்கையாக உள்ளது.பணம் இருந்தால் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கொடுக்க முடிகிற மாதிரிகடன் வாங்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமாவும் தப்பமுடியும்.இந்த விஷயத்தில் மலையாளப் படத் தயாரிப்பாளர்களைப் பார்த்து நம்மவர்கள்கற்றுக் கொள்வது நல்லது.இந் நிலையில் தோழியின் பினாமியாகக் கருதப்படும் அந்த அன்பான தயாரிப்பாளர்மீது அரசின் கவனம் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர் மீது கடும்நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    By Staff
    |

    மும்பையில் கோலோச்சி வரும் தாதாக்களுக்கு சற்றும் குறைவில்லாமல், அவர்களைவிட படு மோசமான தாதாக்கள் கோலிவுட்டையும் ஆட்டிப் படைத்து வருகிறார்கள்என்பது அஜீத் விவகாரத்தின் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

    தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை நடிகர்களில் முதலிடத்தில் உள்ள நடிகர்களில்முக்கியமானவர் அஜீத். இப்போது நேரம் சரியில்லாமல் சுணங்கிப் போய்க்கிடக்கிறார்.

    அவரையே ஒரு தேர்ட் கிளாஸ் குற்றவாளியைப் போல, ஹோட்டல் ரூமில் அடைத்துவைத்து அசிங்கமாகப் பேசியும், திட்டியும், அடிக்க முயன்றும், மிரட்டியும் பாண்ட்பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்திருப்பது கோலிவுட்டைஅதிர வைத்துள்ளது.

    இந்த சம்பவத்தில் அடிபடும் முக்கியப் புள்ளி தமிழ் சினிமாவின் கரும்புள்ளியாகதிகழ்கிறார் என தமிழ்த் திரையுலக பிரபலங்கள் மெளனமாக குமுறுகிறார்கள்.

    உயிர்த் தோழியின் பினாமியாக கருதப்படும் இந்த அன்பான நபரின்அடாவடித்தனத்திற்கு எல்லையே கிடையாது என்று முகத்தில் பயம் அப்பகூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள் பலர்.

    தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் ஆண்டுக்கு 600 படம், 700 படம் என்று தயாரித்துக்குவித்தார்கள். ஆனால் இன்றோ ஆண்டுக்கு 100 நேரடித் தமிழ்ப் படங்கள் வந்தாலேபெரிது என்கிறார்கள். இந்த நிலை ஏற்பட என்ன காரணம் என்று கேட்டால், நிதிப்பற்றாக்குறைதான் முக்கியக் காரணம் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

    முன்பெல்லாம் தயாரிப்பாளர்களை முதலாளி என்றுதான் சினிமா உலகில் பயபக்தியோடு அழைப்பார்கள். அந்த அளவுக்கு வெயிட்டாக அப்போது இருந்தார்கள்.ஆனால் இன்றைய தயாரிப்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள்?

    அங்கே, இங்கே கொஞ்சம் பணத்தைப் புரட்டி பட பூஜையைப் போடுகிறார்கள்.மும்பையிலிருந்து ஒரு குத்துப் பாட்டு நாயகி, கிளாமருக்காகவே பிறந்தவர் போலஒரு கலக்கல் நாயகியைப் போட்டு படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

    கதையைப் பற்றிக் கவலைப்படுவதே கிடையாது. பூஜை போட்ட பின்னர் நேராக ஒருபைனான்சியரிடம் ஓடுகிறார்கள். அந்த பைனான்சியர் என்ன வட்டி போட்டாலும்கவலைப்படாமல் அவர் காட்டும் இடத்தில் கையெழுத்துப் போட்டு விட்டு கரன்சிநோட்டுக்களை அள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

    இப்படித்தான் படத் தயாரிப்பு ஆரம்பமாகிறது. இடையில் ஏதாவது பிரச்சினையால்படம் பாதியில் நின்றாலோ அல்லது படம விற்காமல் போனலோ அல்லது சரியாகஓடாவிட்டாலோ அந்த தயாரிப்பளரின் கதி அதோ கதிதான்.

    பணம் வாங்கிய பைனான்சியரிடம் அந்த தயாரிப்பாளர் படாத பாடுபடுவார்.கொடுத்த பணத்தை வசூலிக்க சொத்துக்களை எழுதி வாங்கிக் கொள்வது என்பதுடீசண்டான பைனான்சியர்கள் செய்யும் நியாயமான வேலை. இதைச் செய்யும்பைனான்சியர்களை குறை சொல்ல முடியாது. கொடுத்த பணத்தை வாங்கசொத்துக்களை வாங்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால், இப்போது பைனான்சியர்கள் என்ற பெயரில் சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ள பெரிய ஆட்களின் பினாமிகள், கந்து வட்டிக் கும்பல்கள்,காண்ட்ராக்டர்கள் ஆகியோர் பணம் வாங்கிய தயாரிப்பாளரையே கடத்திச் செல்வது,அடைத்து வைத்து மிரட்டுவது என்பது உள்ளிட்ட அடாவடித்தனங்களை அலட்டிக்கொள்ளாமல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

    இவர்களுக்குப் பயந்து எப்பாடு பட்டாவது பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுகிறார்கள். அது முடியாமல் போகும்போது தற்கொலை முடிவை நாடுகிறார்கள்அல்லது எங்காவது ஓடிப் போய் விடுகிறார்கள்.

    பைனான்சியரால் பாதிக்கப்பட்டு உருண்ட பெரிய தலை சில ஆண்டுகளுக்கு முன்புதூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஜீவி. மிகப் பிரபமலானகுடும்பததைச் சேர்ந்த ஜீவி பல தரமான படங்களைத் தயாரித்தவர். மணிரத்தினத்தின்அண்ணன்.

    இப்படிப்பட்ட பெருமை இருந்தும், அவரை அந்த பைனான்சியர் படு கேவலமாகநடத்தியதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போதுகூறப்பட்டது. அதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய காவல்துறை அப்படியேநின்று விட்டது.

    இன்று வரை ஜீவியின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை போலீஸார் சொல்லவேஇல்லை, கண்டுபிடிக்கவும் இல்லை.

    தமிழ் சினிமா பைனான்சியர்களிலேயே மிகப் பெரும் புள்ளியாக அந்த அன்பானபைனான்சியர் தான் திகழ்கிறார்.

    அவரது பாக்கெட்டில் சிக்கித் தவிப்போரின் எண்ணிக்கை மிகவும் நீளம். அவரதுஅடாவடித்தனங்களுக்கு அளவே இல்லையாம். எத்தகைய மோசமான முறையையும்கையாள இந்த அன்பானவர் தயங்குவதே இல்லை.

    இவருக்கென்று பெரிய அடியாள் கூட்டம் உண்டு. பணத்தைத் திருப்பித் தராததயாரிப்பாளர், இயக்குனர், நடிகர், நடிகைகள் என யாராக இருந்தாலும் சற்றும்கவலைப்படாமல் தங்களது இருப்பிடத்திற்குத் தூக்கிக் கொண்டு போய் துவைத்துஎடுத்து விடுவார்களாம்.

    இயக்குனரை திருமணம் செய்த அந்த காதல் கோட்டை நாயகி சொந்தமாக தயாரித்தபடத்திற்கு இவரிடம் கடன் வாங்கினார். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால்(வட்டி அந்த அளவுக்கு ஜாஸ்தி!) தேவயானியை தங்களது இருப்பிடத்திற்குத் தூக்கிக்கொண்டு போய் அடைத்து வைத்தனர்.

    இதேபோல நடிகர் கார்த்திக்கையும் இக்கும்பல் ஒருமுறை கடத்திக் கொண்டு போய்விட்டதாக முன்பு சலசலப்பு எழுந்தது. ஜீவியையும் குடும்பத்தோடு இந்தக் கும்பல்கடத்தியதாகவும் கூறப்பட்டது.

    இவர்களிடம் சிக்கி ரம்மை நடிகை படாதபாடு பட்டு வருவது உலகுக்கே தெரியும்.

    இப்படிப்பட்ட கும்பலிடம்தான் இப்போது அஜீத் சிக்கிக் காண்டு விட்டதாககூறுகிறார்கள். இத்தனைக்கும் இவர்களிடம் அஜீத் கை நீட்டி காசு ஏதும்வாங்கவில்லை.

    அவருக்கு பிரச்சனை பாலா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்துடன் தான். ஆனால்,இடையில் படத்தை தேனப்பன் டேக் ஓவர் செய்ய, ஹீரோவை பாலா மாற்றிவிடஅஜீத்துக்கு சிக்கலானது.

    படத்துக்காக தந்த அட்வான்ஸை திருப்பித் தருவது தொடர்பாக பேசலாம் வாருங்கள்என்று கூறி கூப்பிட்டுவிட்டு ஹோட்டல் ரூமில் அடைத்து வைத்து மிரட்டி, வாடாபோடா என்று பேசி, அடிக்கவும் முயன்று பல வெற்றுப் பத்திரங்களில் அஜீத்திடம்கையெழுத்து வாங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த விவகாரத்தில் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அந்த மதுரைக்கார பைனான்சியர்அஜீத்தை செய்த அர்ச்சனைகளை அச்சில் ஏற்ற முடியாதாம்.

    அந்த அளவுக்கு அஜீத்தை அவர் படு மோசமாகப் பேசியுள்ளார் இந்த அன்பர்.

    இனியாவது தமிழ் திரையுலகினர் ஒட்டுமொத்தமாக திரண்டு இதுபோன்ற தாதாக்களின்பிடியிலிருந்து விடுபட்டு, தமிழ் சினிமாவைக் காக்க வேண்டும் என்பதே பலதயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் கோரிக்கையாக உள்ளது.

    பணம் இருந்தால் படம் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கொடுக்க முடிகிற மாதிரிகடன் வாங்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்களும் தமிழ் சினிமாவும் தப்பமுடியும்.

    இந்த விஷயத்தில் மலையாளப் படத் தயாரிப்பாளர்களைப் பார்த்து நம்மவர்கள்கற்றுக் கொள்வது நல்லது.

    இந் நிலையில் தோழியின் பினாமியாகக் கருதப்படும் அந்த அன்பான தயாரிப்பாளர்மீது அரசின் கவனம் விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர் மீது கடும்நடவடிக்கை பாயவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X