ஹீரோயினை தேர்வு செய்றதுலையும் புது ரூட்டை போட்டிருக்கிறாராம் அந்த விரல் நடிகர்! அது என்ன தெரியுமா?

சென்னை: அந்த விரல் நடிகர் வழக்கமாகவே அந்த ஒல்லி நடிகரின் ஹீரோயின்களையே தனது புதிய படங்களுக்கு புக் செய்வார். ஆனால், இந்த முறையை தனது ரூட்டை மாற்றியுள்ளார்.

இளைஞர்களை கவர் பண்ண இளம் மாஸ் ஹீரோ புதிய புதிய நடிகைகளை தமிழுக்கு களம் இறக்கி வருகிறார்.

இனிமேல் அந்த ஒல்லி நடிகரின் ஹீரோயின்களை புக் பண்ணாமல் இந்த இளம் மாஸ் ஹீரோவின் நடிகைகளை புக் செய்ய புதுசா விரல் நடிகர் ஆர்டர் போட்டுள்ளாராம்.

எத்தனை தடவை

எத்தனை தடவை

கம்பேக் என்கிற வார்த்தையே அந்த விரல் நடிகருக்கு எத்தனை தடவை என கணக்கு போடும் அளவுக்கு பல முறை கோலிவுட்டிற்கு கம்பேக் ஆகி பின்னர், காணாமல் போயுள்ளார்.

பழைய ஃபார்முலா

பழைய ஃபார்முலா

அந்த விரல் நடிகர் இதுவரை பல படங்களில் அந்த ஒல்லி நடிகரின் ஹீரோயின்களையே தனது புதுப்படங்களுக்கு புக் செய்து வந்தார். ஆனால், தற்போது அந்த பழைய ஃபார்முலாவை கைவிட அவர் திடீரென முடிவு செய்துள்ளாராம்.

அது மாறலையே

அது மாறலையே

தனது பழைய ரூட்டையெல்லாம் மாற்றி புது ரூட்டில் பயணிக்க அந்த விரல் நடிகர் முடிவு செய்துள்ளார். ஆனாலும், தனது பழைய ஃபார்முலாவான மற்ற நடிகர்களின் நடிகைகளை தனது படங்களுக்கு புக் செய்யும் பழக்கத்தை மட்டும் இன்னும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

இனிமே இவர்தான்

இனிமே இவர்தான்

அடுத்த மாஸ் நடிகராக மாற வேண்டும் என்று இப்பவே பயங்கர ரிஸ்க் எடுத்து தோல்விகளை சந்தித்து வரும் அந்த இளம் மாஸ் நடிகர் படத்தில் நடிக்கும் நாயகிகளுடன் தான் இனிமே அந்த விரல் நடிகர் நடிக்கவுள்ளாராம்.

அதற்கு அஸ்திவாரம்

அதற்கு அஸ்திவாரம்

அதற்கு அஸ்திவாரமாகத் தான் மாஸ்க் படத்தில் அந்த இளம் மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாக நடித்த நடிகையை தனது அரசியல் படத்திற்கு புக் செய்ய சொல்லியிருக்கிறாராம் அந்த விரல் நடிகர்.

எல்லாம் ராசிதானாம்

எல்லாம் ராசிதானாம்

ஒல்லி நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகைகளை இவர் படத்தில் புக் செய்து நடித்து பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஒரே படமும் அந்த நடிகரின் நடிகையை போட்டு எடுத்ததால் தான் படுதோல்வியை சந்தித்ததாம். அதனால் தான் இனிமேல் ராசியான நடிகரின் பின்னால் பயணிக்க அந்த பிரபல நடிகர் முடிவு செய்துள்ளார்.

அரசியல் ஆசை

அரசியல் ஆசை

மாஸ் நடிகர்களுக்கு வரும் அரசியல் ஆசை தற்போது அந்த விரல் நடிகரையும் தொற்றிக் கொண்டுள்ளது. அதற்கான முதல் படியாகத்தான் அந்த ஹாலிவுட் படங்களை சுட்டு இயக்கும் இயக்குநருடன் கைகோர்த்துள்ளார்.

ஒர்க்கவுட் ஆகுமா?

ஒர்க்கவுட் ஆகுமா?

விரல் நடிகருக்கு அரசியல் படம் எல்லாம் ஒர்க்கவுட் ஆகுமா என்று அவர் காதுபடவே சினிமா வட்டத்தில் இருப்பவர்கள் கேட்டுள்ளார்கள். ஆனால், இதெல்லாம் செய்தால் தான் பின்னால் அதையெல்லாம் சாதிக்க உதவியாக இருக்கும் என பஞ்ச் பேசுகிறாராம்.

பழைய லவ்

பழைய லவ்

இந்த கூத்து மட்டுமின்றி மீண்டும் பழைய லவ்வருக்கு உதவி செய்கிறேன் என்ற பேர் வழியில் அவருடன் உல்லாசமாக ஊர் சுற்றி வருகிறாராம். சீக்கிரமே நல்ல செய்தியும் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X