»   »  சங்கத் தேர்தல் மட்டுமல்ல... பொங்கல் களத்திலும் மல்லுக் கட்டும் நடிகர்கள்

சங்கத் தேர்தல் மட்டுமல்ல... பொங்கல் களத்திலும் மல்லுக் கட்டும் நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கத் தேர்தலில் மோதிக் கொண்ட தோரணையும், விரல் நடிகரும் மீண்டும் ஒருமுறை பொங்கல் தினத்தில் மோதிக் கொள்ளவிருக்கிறார்களாம்.

விரல் நடிகரின் நடிப்பில் உருவான ஆளான படமும், தோரணை நடிகரின் நடிப்பில் உருவாகி வரும் நடனத்தை மையமாகக் கொண்ட படமும் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறதாம்.

இந்த இரண்டு படங்களுமே குழந்தை இயக்குநர் படமென்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம். சங்கத் தேர்தலில் மோதிக்கொண்டதில் தோரணை வென்று விட்டாராம்.

அதனால் பொங்கல் தினத்தில் தனது படத்தை வெளியிட்டு தனது படத்தின் வெற்றி மூலம் தான்தான் பெஸ்ட் என்று நிரூபிக்கப் போகிறாராம் விரல் நடிகர்.

இந்த சண்டையில் எந்தப் படம் வென்றாலும் இயக்குனரின் காட்டில் தான் மழை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இத்தனை நாட்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடந்த படத்தை வெளியிடும் நேரத்திலும் தனது கெத்தை விடமாட்டேங்கிறாரே என்கிறார்கள்.

மேலும் எல்லாம் இருந்தும் என்ன புண்ணியம் நம்பர் 1 நடிகையை தனது படத்தில் ஆட வைக்க முடியவில்லையே என்று விரல் நடிகரை கலாய்த்து வருகின்றனர் இன்னும் சிலர்.

இந்த மோதலில் வெற்றிபெறப் போவது யார் என்று மீண்டும் ஒரு விவாதம் தொடங்க ஆரம்பித்து இருக்கிறது கோடம்பாக்கத்தில்.

English summary
Finger Actor Movie Released on Pongal Day. After Nadigar Sangam Elections Finger Actor once Again Clash with Pose Actor.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil