»   »  'இன்னும் திருந்த மாட்றாரே'... விரல் நடிகர் மீது கடுப்பான புத்த இயக்குநர்!

'இன்னும் திருந்த மாட்றாரே'... விரல் நடிகர் மீது கடுப்பான புத்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விரல் நடிகரை வைத்து அஞ்சாத படமெடுத்து வரும் புத்த இயக்குநர் நடிகர் மீது ஏக வருத்தத்தில் இருக்கிறாராம்.

நடிகர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தபோதும் கூட அதற்கெல்லாம் அஞ்சாமல் புத்த இயக்குநர் நடிகரை வைத்துப் படமெடுத்து வருகிறார்.

Finger Actor Irritated Buddha Director

ஆனால் வெளியீட்டுத் தேதி அறிவித்த பின்னும் கூட இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் இருக்கிறதாம். இதனால் படப்பிடிப்பை ஏற்பாடு செய்துவிட்டு இயக்குநர் உள்ளிட்டோர் காத்திருக்க நடிகர் கடைசிவரை வரவிலையாம்.

இதனால் கடுப்பான இயக்குநர் தெலுங்கு நடிகரை வைத்து அந்த மொழிக்கான பாடல் வெளியீட்டு விழாவை நிகழ்த்தி விட்டாராம். விரல் நடிகரின் சொதப்பலால் தமிழில் இசை வெளியீடு குறித்து மவுனம் காக்க வேண்டிய கட்டாயத்திற்கு இயக்குநர் தள்ளப்பட்டிருக்கிறார்.

தற்போது ஒல்லி நடிகரின் ஷூட்டிங்கில் இயக்குநர் பிஸியாகி விட, இதைப்பற்றியெல்லாம் நடிகர் கவலைப்படாமல் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து வழக்கம்போல தந்தைக் குலம் மகன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அறிக்கை விட்டு வருகிறாராம்.

ஒருதடவன்னா பரவாயில்லை ஒவ்வொரு தடவையும் இப்படிப் பண்ணினா எப்படி? என்று விஷயம் அறிந்தவர்கள், விரல் நடிகரைக் கிண்டலடித்து வருகின்றனர்.

English summary
Sources Said Finger Actor Irritated Buddha Director in Recent Movie Shooting.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil