»   »  தள்ளிப் போகும் படம்... சிக்கலில் விரல் நடிகர்

தள்ளிப் போகும் படம்... சிக்கலில் விரல் நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது படங்கள் அனைத்தும் தொடர்ந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதால் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம் விரல் நடிகர்.

அனுமார் வாலாக 3 வருடம் நீண்ட அந்தப் படம் சமீபத்தில் தான் வெளியாகியது. இதனால் தனக்கு இனி பிரச்சினையில்லை என்று சந்தோஷத்தில் இருந்த நடிகரின் நம்பிக்கை தற்போது நாளுக்குநாள் தேய்ந்து வருகிறது.

ஆமாம் ஆளான அந்தப் படம் முழுவதும் முடிந்தாலும் முன்னாள் காதலியான நம்பர் நடிகையின் பிடிவாதத்தால் படம் வெளிவருவது சிக்கல் தான் என்று கூறுகிறார்கள்.

ஏன் நம்பர் நடிகை தொடர்ந்து மறுக்கிறார் என்றால் நடிப்பதற்கு பேசப்பட்ட சம்பளத்தில் பாதியே கொடுத்திருக்கிறார்களாம். மேலும் விரல் நடிகர் தனியாக 30 லட்சம் தருவதாகச் சொல்லிய பணமும் தரவில்லையாம்.

இன்னும் இரண்டு பாடல்கள் பாக்கியிருப்பதால் நடித்துத் தாருங்கள் மீதித் தொகை அனைத்தையும் தந்துவிடுகிறேன் என்று கேட்டாலும், முடியவே முடியாது என்று கறாராக சொல்லிவிட்டாராம் நம்பர் நடிகை.

ஆயிரத்தில் ஒருவனான அந்த இயக்குனருடன் விரல் நடிகர் இணைந்த படமும் சமீபத்தில் நின்று போனது. தொடர்ந்து தனது படங்களுக்கு பிரச்சினை எழுவதால் தற்போது மீளமுடியாத வருத்தத்தில் இருக்கிறாராம் நடிகர்.

English summary
The Love with Romantic Movie Continuously Postponed, now the finger actor get Upset and he is faced some other Problems.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil