காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.. விரல் நடிகரின் புது பாலிசி இதுதானாம்!

சென்னை: கஜினி முகமதுவை விட தமிழ் சினிமாவில் அதிகம் முறை கம்பேக் ஆகும் அந்த விரல் நடிகர், தற்போது தனக்கான புது பாலிசியை உருவாக்கியுள்ளாராம்.

அது என்ன வென்றால் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது தான். மறுபடியும் கம்பேக் ஆகவுள்ள அந்த விரல் நடிகர், புதிய தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்து வரிசையாக டேட் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.

ஏற்கனவே தயாரிப்பாளர் ஒருவரிடம் வாங்கிய அட்வான்ஸ் பிரச்சனை பூதகரமான நிலையில், தற்போது அதையே தனது புதிய ஆயுதமாக மாற்ற முடிவு செய்துள்ளாராம்.

வேற லெவல் பிளான்

வேற லெவல் பிளான்

இதுவரைக்கும் பார்த்த ஆட்டத்தை விட இந்த வாட்டி வித்தியாசமான ஆட்டத்தை ரசிகர்கள் பார்ப்பாங்கன்னு வேற லெவல் பிளான் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார் அந்த விரல் நடிகர்.

மிஸ் ஆகாது

மிஸ் ஆகாது

போன தடவை கம்பேக் ஆன உடனே மறுபடியும் சொதப்பிய நிலையில், இந்த வாட்டி தனது குறி மிஸ் ஆகாது என திட்டவட்டமாக கூறிவருகிறார் அந்த விரல் நடிகர். அதற்கான புது புது வியூகங்களையும் வகுத்து பக்காவாக ஸ்கெட்ச் போட்டு களமிறங்க உள்ளாராம்.

மாஸ்டர் ஸ்ட்ரோக்

மாஸ்டர் ஸ்ட்ரோக்

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் எனும் பழமொழிக்கு ஏற்ப இந்த முறை கம்பேக் ஆகும் போதே அடுத்தடுத்த படங்களில் புக்காக முடிவு செய்துள்ளாராம். மற்ற முன்னணி நடிகர்கள் கைவசம் அரை டஜனுக்கு மேல் படங்கள் வைத்திருக்கும் நிலையில், தானும் அதே ரூட்டை இனிமே ஃபாலோ பண்ண முடிவு செய்துள்ளார்.

காதல் கைகூடுமா

காதல் கைகூடுமா

மறுபடியும் தான் விட்ட இடத்தை கோலிவுட்டில் பிடிக்க வேண்டும் என்று துடித்து வரும் அந்த விரல் நடிகருக்கு, பிரேக் அப் ஆன பழைய காதல் ஒன்றும் கைகூடும் நிலையில், உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.

எக்ஸ்டென்சன்

எக்ஸ்டென்சன்

சும்மா ஒரு சீனுக்கு நடிக்க ஒப்புக் கொண்ட அவர், தற்போது அந்த பப்ளி நடிகையுடன் மேலும் பல காட்சிகள் நடித்து வருகிறாராம். படத்துக்கு படமும் ஆச்சு, பழைய காதலியோடு டூயட்டும் பாடியாச்சு என கோலிவுட்டில் கிசு கிசுக்கத் தொடங்கியுள்ளனர்.

உறுதியான முடிவு

உறுதியான முடிவு

காதல் விளையாட்டுகள் ஒரு பக்கம் இருந்தாலும், பழையபடி தன்னுடைய இடத்தை பிடிக்க வேண்டும் என்பதில் தான் தற்போது விரல் நடிகர் தீவிரம் காட்டி வருகிறார். அந்த முடிவில் இம்முறை உறுதியாக இருக்கவும் முடிவு செய்துள்ளார். இந்த முறை வேதாளம் முருங்கை மரம் ஏறாமல் இருந்தால் சரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X