பிரிட்டிஷ் மாடலுடன் சல்மான் காதல்: ஆச்சரியத்தில் பாலிவுட்

நாற்பதுகளிலும் அசத்தலாய் இளம்பெண்களை கவரும் வகையில் வலம் வந்து கொண்டிருப்பவர் பாலிவுட் ஹீரோ சல்மான் கான். சல்மான் கானுக்கும் காதலுக்கும் ஏக தூரம் போல. படத்துக்குப் படம் சல்மான் சட்டையைக் கழற்றி கடாசுவது போல அவரை விட்டு காதலிகளும் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அவரது சூப்பர் ஹாட் காதலிகள் அனைவரும் இறுதியில் குட்பை சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர். ஆனால் மன்மதன் பார்வை அவரை விட்டு நீங்காது இருக்கிறது. ஒரு ஆள் போனால் அடுத்த ஆள் சட்டென்று வந்து உட்கார்ந்து கொள்கிறார். தற்போது சல்மானின் காதலிகள் பட்டியலில் சேர்ந்திருப்பவர் பிரிட்டிஷ் மாடல் ஹேசல்.
அன்மையில் சல்மானுக்கு யாரோ புது காதலி கிடைத்துள்ளதாக கிசுகிசு வந்த வண்ணம் இருந்தன. தற்போது அது உண்மையாகிவிட்டது. அவரும், ஹேசலும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு புனேவில் பைக்கில் பறந்து செல்வதை சிலர் பார்த்திருக்கின்றனர். இருவரும் கணிசமான நேரத்தை ஒன்றாக செலவழிப்பதாகதவும் தெரிகிறது.
தற்போது சல்மான் சித்திக் இயக்கத்தில் பாடிகார்ட் (தமிழில் விஜய் நடித்த காதலன்) படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் ஹேசல் வந்து விடுகிறாராம். அங்கும் இருவரும் ஜோடியாகவே இருக்கிறார்களாம்.
சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைப் என சல்மானின் காதல் வரிசையில் தற்போது ஹேசல் இணைந்திருப்பதில் ஆச்சரியம் இல்லைதான்.


Click it and Unblock the Notifications











