ஒல்லி நடிகருடன் நடிக்க அஞ்சும் மலையாள நடிகைகள்.. வரிசையா மார்க்கெட் காலியாகுதாம்.. ஓவர் புலம்பல்!

By Staff

சென்னை: ஒல்லி நடிகரை வைத்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தான் ஒரு ஓரமாக தலையில் துண்டுப் போட்டு அழுகின்றனர் என்று பார்த்தால், சமீப காலமாக அந்த நடிகருடன் ஜோடி போட்டு நடிக்கும் மலையாள நடிகைகள் எல்லாம் பட வாய்ப்புகளை அதிரடியாக இழந்து அழுது புலம்ப ஆரம்பித்து விட்டதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

நடிகருடன் கடைசியாக சில படங்களில் கூட நடித்த நடிகைகளுக்கு சமீப காலமாக மார்க்கெட் சுத்தமாக காலியாகி விட்டது என்றும் புதிதாக அவருடன் நடிக்க சில மலையாள நடிகைகள் தயக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

Flop Actor Movie Heroines upset over losing their markets in cine industry

நம்பர் நடிகை விட்ட சாபத்துக்கு பிறகே நடிகருக்கு இப்படியெல்லாம் நடக்கிறது என்றும் நடிகரும் பிளாக் மேஜிக் செய்தது போல ஒரே மாதிரியான மொக்கைப் படங்களையே தேர்வு செய்து நடித்து தனது ரசிகர்களையும் காண்டாக்கி வருகிறார் என்கின்றனர்.

மனைவியை பிரிந்து: நல்லா இருந்த குடும்பத்திலும் நடிகருக்கு தேவையில்லாமல் சிக்கல் ஏற்பட மனைவியை பிரிந்து தனிமையிலேயே இனிமை காண முடியுமா என வாழ்ந்து வருகிறாராம். இளமையில் ஏகப்பட்ட ஆட்டம் போட்ட நிலையில், அதற்கு எல்லாம் இப்போ சேர்த்து வச்சு கர்மா இஸ் பூமரங் என்பது போல கட்டம் கட்டி பொளந்து வருகிறது என்கின்றனர்.

தொடர் தோல்வி: முன்பெல்லாம் அந்த நடிகர் படமென்றாலே இளைஞர்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்குச் சென்று படத்தை பார்த்து ஆட்டம் போட்டு கொண்டாடி வந்தனர். ஆனால், சமீப காலமாக ஒரு பாடல் கூட ஹிட்டாகும் அளவுக்கான படங்களை கூட நடிகர் கொடுக்க முடியாமல் தவித்து வருவதால் அவருக்கு தொடர் தோல்வி ஏற்பட்டு வருகிறதாம். தேவையில்லாமல் நடிகர் கதையில் மூக்கை நுழைப்பது தான் இதற்கு காரணம் என டைரக்டர்களும் கையை விரித்து விடுவதாக கூறுகின்றனர்.

நடிகைக்கு மார்க்கெட் போச்சு: நல்லா நடித்துக் கொண்டிருந்த மலையாள நடிகைக்கு கடைசியாக நடிகருடன் ஒரு படத்தில் நடித்த நிலையில், ஒரு வருஷமாக பட வாய்ப்புகளே இல்லாத நிலை உருவாகி விட்டது என்று கூறுகின்றனர். நடிகை ஒரே மாதிரி தான் நடிக்கிறார் என்றும் வித்தியாசமான கதைகள் இவருக்கு இனிமேல் செட்டாகாது என்றும் நடிகையை அப்படியே ஓரங்கட்டி விட்டார்கள் என்கின்றனர்.

புலம்பும் இளம் நடிகை: கோலிவுட்டுக்கு வந்ததில் இருந்து பல நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை அதிரடியாக பெற்று வந்த நடிகை ஒரே ஒரு வாரம் மட்டுமே ஒல்லி நடிகர் படத்தில் நடித்த தண்டம் தற்போது புதிதாக எந்தவொரு பட வாய்ப்புகளும் வராமல் நின்றுவிட்டதாக புலம்ப ஆரம்பித்து விட்டாராம். அடுத்து நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளுக்கும் ஒரே பயம் இப்போதே தொற்றிக்கொண்டது என்கின்றனர். புதிதாக நடிகருடன் நடிக்க ஒரு சில மலையாள நடிகைகள் மறுத்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. நடிகரின் கம்பேக் மட்டுமே இந்த பஞ்சாயத்தை தீர்க்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X