படமே ஓடல.. சம்பளத்தை மட்டும் ஏத்திக்கிட்டே போகும் உர் நடிகர்.. டென்ஷனில் தயாரிப்பாளர்கள்?

By Staff

சென்னை: தொடர்ந்து பல்பு வாங்கிக் கொண்டு தனது மார்க்கெட்டை தமிழ்நாட்டில் இழந்து வரும் அந்த பிரபல நடிகர் மேலும், 10 கோடி ரூபாயாக தனது சம்பளத்தை புதிய படம் ஒன்றுக்காக உயர்த்தியுள்ளார் என்று கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

ஜாலியாக படங்களை பண்ணி பல ஆண்டுகள் ஆகிறது என்றும் உர் நடிகரை ரசிகர்களே உலுக்கி எடுத்தாலும் அதை பற்றியெல்லாம் கவலையே படாமல் தனக்கு பிடித்த கதைகளையே தேடிப்பிடித்து நடித்து வருகிறாராம்.

Flop Actor Suddenly increased 10 Crores Salary and upset Producers

ரசிகர்களை பிரைட் நடிகர் கூட புரிந்துக் கொண்டு பல வருடங்கள் கழித்து ஹிட் கொடுத்து விட்டார். ஆனால், இவர் ஏன் இன்னமும் திருந்தாமல் இருக்கிறார் என அவரது காதுபடவே சில பிரபலங்கள் பேசத் தொடங்கிய நிலையிலும், நடிகர் எந்த மாற்றத்தையும் இப்போதைக்கு செய்யப்போவதில்லை என்கிற உறுதியிலேயே உள்ளார் என்கின்றனர்.

டைரக்டர் மீது நம்பிக்கை: தொடர்ந்து நல்ல நல்ல இயக்குநர்களை தனது வசம் வைத்துக் கொண்டு தனக்கு பிடித்த படங்களை பாஸ் நடிகர் வழியில் செய்து வருகிறார் உர் நடிகர். ஸ்டார் நடிகர், மாஸ் நடிகர் பாணிக்கு இவர் திரும்பினால் தான் ரசிகர்களை கவர முடியும் என பலரும் எடுத்துச் சொன்னாலும், அதெல்லாம் தனக்கு வேண்டாம் என தனது ரூட்டில் பயணித்து வருகிறாராம் நடிகர்.

ஜெட் வேகத்தில் உயர்த்திட்டாரு: படங்கள் படு தோல்வியை சந்திப்பது பற்றியெல்லாம் தனக்கு கவலையே இல்லை என்றும் தனக்கு ஷேர் மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது என்றும் தன்னை வைத்து படமெடுக்க ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் க்யூவில் உள்ளனர் என ஜெட் வேகத்தில் படங்கள் படுதோல்வியை சந்தித்தாலும் சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம் அந்த உர் நடிகர். சமீபத்தில், அடுத்த படத்துக்கு 10 கோடி ரூபாய் அதிக சம்பளத்தை ஏற்றியுள்ளதாக கூறுகின்றனர்.

தமாஸ் நடிகருடன் தான் போட்டி: சம்பள விஷயத்தில் தமாஸ் நடிகருடன் தான் போட்டியே என்கிற மனநிலையில் தான் நடிகர் தொடர்ந்து சம்பளத்தை அதிகரித்துக் கொண்டே போகிறாராம். பிரைட் நடிகரின் படமும் ஹிட் அடித்த நிலையில், அவருடைய சம்பளமும் அதிகரிக்க உள்ள நிலையில், இதுதான் சரியான நேரம் என ஏற்றிவிட்டாராம். பாவம் அவரை நம்பி வரிசையில் காத்திருந்த தயாரிப்பாளர்கள் கூடுதல் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர். அடுத்த படம் ஹிட் அடித்து விட்டால் கண்டிப்பாக மார்க்கெட் நிலை மாறிவிடும் என்பதால் நடிகர் இப்படி விலையை ஏற்றிவிட்டார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X