பேசாம நான் ஹீரோ ஆகட்டா.. மனைவியிடம் மீண்டும் பெரிய பிட்டுப்போட்ட கணவர்.. அடுத்த ஃபர்னிச்சர்?

By Staff

சென்னை: பிரபல இயக்குநர் ஒருவர் தொடர்ந்து ஃப்ளாப் படங்களை கொடுத்து மனைவியின் காசை கரியாக்கி வருவது போதாது என்று அடுத்து தான் ஹீரோவாக மாறிவிடுவா? என சமீபத்தில் கேட்டு வீட்டில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

தமிழ் சினிமாவின் நிலை ஏற்கனவே நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் ஹீரோவுக்காகவும், ஹீரோயினுக்காகவும், இயக்குநருக்காகவும் எல்லாம் ரசிகர்கள் படம் பார்க்க போனார்கள். ஆனால், சமீப காலமாக ஓடிடியில் பல ஃபாரீன்களை பார்த்து விட்டு படம் ரொம்பவே நல்லா இருக்குதுன்னு சோஷியல் மீடியாவில் இன்ஃப்ளூயன்சர்கள் சொன்னால் மட்டுமே போகும் சூழல் உருவாகியுள்ளது.

Flop Director try to convince her wife for his Hero Debut
Photo Credit:

அப்படி இல்லை என்றால் 4 வாரத்தில் ஓடிடியிலும், 2 வாரத்தில் டெலிகிராமிலும் படங்கள் வந்துவிடுவதால் அங்கேயே பார்த்து விடுகின்றனர்.

மனைவி காசை கரியாக்கும் கணவர்: சில இயக்குநர்கள் பூ நடிகை காலத்தில் இருந்தே இப்படி மனைவி சம்பாதிக்கும் காசை டைரக்ட் பண்றேன் என்கிற பெயரில் கரியாக்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில், இப்போ இவர் தான் லேட்டஸ்ட். கணவர் அடம் பிடிக்கிறாரே என்பதற்காக எப்படியாவது சம்பாதித்த பணத்தையும் தெரிந்தவர்களிடம் கடனை உடனை வாங்கி கணவருக்காக படத்தை ஏற்பாடு செய்துக் கொடுத்த நடிகைக்கு பெரிய பல்பு கொடுத்தது தான் கணவர் பார்த்த தரமான சம்பவம் என்கின்றனர்.

ஆணியே புடுங்க வேண்டாம்: இதற்கு மேல் படம் பண்றேன் என சொல்லிட்டு வராதீங்க, ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்றே மனைவி கண்டித்து விட்டாராம். இந்த தொழிலை தவிர தனக்கு வேறு ஏதும் தெரியாதே என்று கணவர் சொல்ல, இந்த தொழிலே உங்களுக்கு சரியாக தெரியவில்லை என மனைவி கலாய்த்து விட்டாராம்.

ஹீரோவாகிடட்டா: சமீப காலமாக பல டைரக்டர்கள் ஹீரோக்களாக மாறி வரும் நிலையில், பேசாம நான் படம் இயக்காமல் ஹீரோ ஆகிடட்டா அந்த படத்துக்கு ஃபைனான்ஸ் ரெடி பண்றியான்னு கணவர் அடுத்த படத்துக்கு பிட்டுப்போட மனைவி கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டாராம். இப்போதைக்கு எதுவும் வேண்டாம், சும்மா வீட்டைப் பார்த்துக்கோங்க என சொல்லி விட்டாராம். ஆனால், கணவர் தனியாக சில டைரக்டர்களிடம் தயாரிப்பாளரை ரெடி செய்ய சொல்லியிருப்பதாகவும் விரைவில் நடிக்கப் போகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X