சுள்ளான், விரல் நடிகரின் 'இணைந்த' திட்டம்
சென்னை: விரல் நடிகரும், சுள்ளானும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்களாம்.
விரல் நடிகரும், சுள்ளானும் ஒரு காலத்தில் பரம விரோதிகள். ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்கு ஆகவே ஆகாது. எங்காவது பார்த்துக் கொண்டாலும் ஆளுக்கு ஒரு பக்கம் முறுக்கிக் கொண்டு செல்வார்கள்.
ஆனால் தற்போது சுள்ளானும், விரல் நடிகரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனர். எலியும், பூனையுமாக இருந்த இந்த இரண்டு பேரும் எப்படி இப்படி நெருங்கிய நண்பர்களானார்கள் என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக கிடக்கிறது.
இந்நிலையில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்களாம். ஆளுக்கு பாதி பணம் போட்டு படத்தை தயாரித்து விடலாம் என்றும், சுள்ளான் அண்ணனையே வைத்து படத்தை இயக்கிவிடலாம் என்றும் பலத்த யோசனையில் உள்ளார்களாம்.
விரல் நடிகர், சுள்ளான் அவரது அண்ணன் ஆகியோருக்கு அண்மையில் எந்த படமும் சரியாக போகவில்லை. இந்நிலையில் படுத்துக் கிடக்கும் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தவே இந்த புதிய திட்டமாம்.


Click it and Unblock the Notifications











