விவாகரத்து நடிகை திடீரென அதுபோன்ற பதிவுகளை போட அவர் தான் காரணமா? மணிக்கணக்கா பேசிக்கிறாங்களாம்!

By Staff

சென்னை: சமீபத்தில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பிரபல நடிகை சமூக வலைதளங்களில் திடீரென ஏகப்பட்ட பதிவுகளை போட அந்த பிரபலம் தான் காரணம் என்கிற தகவல் கசிந்துள்ளது.

முன்னணி நடிகையாக தென்னிந்தியாவையே கலக்கி வந்த அந்த பிரபல நடிகை வட இந்தியா பக்கம் சென்றதன் விளைவு தான் அவர் குடும்பத்தில் இப்படி ஒரு விரிசல் வரக் காரணமே என்கின்றனர்.

நடந்து முடிந்ததை மறக்காமல் தவித்து வரும் நடிகைக்கு ஆறுதலாக தற்போது ஒரு துணை கிடைத்து இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் விமர்சனம்

ஆரம்பத்தில் விமர்சனம்

நடிப்பே வராது என ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு வந்த அந்த நடிகை படிப்படியாக பெரிய படங்களில் ஒப்பந்தம் ஆகி தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்தார். டூயட் பாட மட்டுமே இவர் சரிபட்டு வருவார் என நினைத்த பலருக்கும் தனது சமீபத்திய நடிப்பால் பதிலடி கொடுத்து இருந்தார்.

அடுத்த இலக்கு

அடுத்த இலக்கு

சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் பெரும் முயற்சி செய்து தனது உடலை கட்டுக் கோப்பாக மாற்றிய அந்த நடிகை அடுத்த இலக்கை நோக்கி நகர ஆரம்பித்த நிலையில், இப்படியொரு பெரிய சிக்கலில் சிக்குவார் என கொஞ்சமும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்.

காதல் முறிந்தது

காதல் முறிந்தது

காதலித்து திருமணம் செய்து கொண்ட காதலர் இப்படி கழட்டி விடுவார் என கொஞ்சமும் அந்த நடிகை எதிர்பார்க்கவில்லை என்பதே அவர் பதிவிடும் பதிவுகள் மூலம் தெரியவருகிறது. மனதில் ஏற்பட்டுள்ள ரணத்தை ஆற்ற ஏகப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அந்த பிரபல நடிகை.

அவர் தான் ஆறுதல்

அவர் தான் ஆறுதல்

காதலரை பிரிந்த நடிகைக்கு ஏற்கனவே விவாகரத்தான நடிகை ஒருவர் தான் ஆறுதலாக பேசி வருகிறாராம். அவர் சொன்ன அட்வைஸை கேட்டுத் தான் ஆன்மிக சுற்றுலா எல்லாம் சென்றுள்ளார் அந்த நடிகை என்கிற தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், பல மணி நேரங்கள் அவருடன் பேசி அவரை தேற்றும் முயற்சியில் அந்த நடிகை ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மறைமுக தத்துவம்

மறைமுக தத்துவம்

மேலும், சொல்ல விரும்புவதை நேரடியாக சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம். மறைமுகமாக தன்னைப் போல தத்துவங்களாக போட்டு மனதை ஆற்றிக் கொள் என்றும் ஃப்ரீ அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம். பழசை மறந்து தனக்கு பிடித்த துறையில் எந்த லெவலுக்கு செல்ல விருப்பம் கொண்டீர்களோ அதை அடைய முயற்சியுங்கள் என்று அட்வைஸ் கொடுக்கும் ஒரு பார்ட்னர் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X