»   »  அரசியலில் குழப்பம்… மீண்டும் நடிக்க வரும் பூ நடிகை!

அரசியலில் குழப்பம்… மீண்டும் நடிக்க வரும் பூ நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சில ஆண்டுகளாக அரசியலில் ஆக்டிவ்வாக இருந்த பூ நடிகை சில மாதங்களாக அமைதி காக்கிறார். அதிலும் புதிய தலைவர் மாநிலத்துக்கு வந்ததில் இருந்து கப்சிப்...!

Former heroine slowly coming out from politics

நடிகை சூரிய கட்சிக்கு நெருக்கமானவர் என்பது கட்சியின் டெல்லி தலைமைக்கே தெரியும். தெரிந்தும் கூட இலை கட்சிக்கு நெருக்கமானவரை இப்போது தலைவராக்கி விட்டிருக்கிறது. அவரும் சூரிய கட்சியுடன் விரோதப் போக்கையும் இலை கட்சியுடன் நெருக்கத்தையும் காட்டத் தொடங்கியுள்ளார். இவையெல்லாம் டெல்லியின் ஆலோசனை இல்லாமல் நடக்க வாய்ப்பில்லை. எனவே 'இனி இந்த கட்சியில் இருந்து அரசியல் பண்ணுவது சிரமம். சில காலத்துக்கு அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்போம்' என்று சினிமா பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார்.

ஒரு படத்தில் நடித்துக்கொண்டே டிவி ரியாலிட்டி ஷோவும் செய்துகொண்டிருப்பவர் தொடர்ந்து நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

English summary
Fat flower actress has decided to say good bye to active politics and committing films for acting in character roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil